கல்விக்காக குறைந்த நிதியை ஒதுக்கும் நாடுகளில் இலங்கை 3வது இடத்தில்

Education, கல்வி

உலகளவில் கல்விக்காக குறைந்தளவு நிதியை ஒதுக்கும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதாக public finance இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை விட ஹைட்டி மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகள் கல்விக்காக குறைவாக நிதியை செலவிடுவதாகவும், குறித்த நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் இரு இடங்களில் காணப்படுவதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளான சியரா லியோன், மாலி மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பாலான தொகையை கல்விக்காக செலவழித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% கல்விக்காக செலவிடுவதாகவும், குறைந்தளவு பணம் செலவழித்த நாடுகளில் 3வது இடத்தில் இருப்பதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.

கல்வியில் முதலீடு செய்வது பொருளாதார வளர்ச்சிக்கும் மனித மேம்பாட்டிற்கும் இன்றியமையாதது எனவும் அதற்கு நிதியில்லாமல் ஒரு நாடு முன்னேறும் என்று நம்ப முடியாது என public finance இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் எதிர்கால நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் மனித மூலதனம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகிய இரண்டும் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என அந்த இணையத்தளம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!