காசா குறித்து உருக்கமான பதிவு

 

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து UFC லைட்வெயிட் சாம்பியனான இஸ்லாம் மகச்சேவ் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார்

உலகளாவிய மௌனம் மற்றும் அலட்சியத்தை அவர் கண்டித்து, “வேறு எந்த நாட்டிலும், நான்கு நாட்களில் 900 பேர் கொல்லப்பட்டால் கற்பனை செய்து பாருங்கள் – முழு உலகமும் அதைப் பற்றிப் பேசி துக்கம் அனுசரிக்கும்” என்று கூறினார். 

“ஆனால் இது காசா, ஒரு சிறிய தேசம் அழிக்கப்படுவதைப் பார்த்து,  உலகம் வெறுமனே அமைதியாக இருக்கிறது, 

யாருக்கும் அஞ்சாத மற்றும் தனது கடைசி மூச்சு வரை தனது நிலத்தைப் பாதுகாக்கும் ஒரு தேசம்,” என்று அவர் மேலும் கூறினார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!