சர்வதேச வர்த்தக வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா: ஆய்வில் தகவல் | India To Drive Global Trade Growth, 3rd After US, China: Report

சர்வதேச வர்த்தக வளர்ச்சியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா முக்கிய பங்கை வகிக்கும் என டிஎச்எல் மற்றும் நியூயார்க் பல்கலை இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அதன் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் கணிசமான பங்கு இந்தியாவினுடையதாக இருக்கும். சர்வதேச வர்த்தக வளர்ச்சியில் இந்தியா 6 சதவீத பங்களிப்பை வழங்கி மூன்றாவது மிகப்பெரிய நாடாக திகழும். அதற்கு முன்பாக, சீனா 12 சதவீத பங்கையும், அமெரிக்கா 10 சதவீத பங்கையும் வழங்கி இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தக்கவைக்கும்.

அடுத்த 5 ஆண்டுகளில் உலக வர்த்தக வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்தை கைப்பற்றுவதால் அதன் வேகப் பரிமாண கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 5.2 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக உயரும். இதன் மூலம் 17-வது இடத்திலிருக்கும் அந்த நாடு 15 -வது இடத்துக்கு முன்னேறும்.

இந்தியாவின் விரைவான வர்த்தக வளர்ச்சியானது அதன் விரைவான பேரியல் பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் அதிகரித்து வரும் அதன் பங்கு ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் உற்பத்தி துறையில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் வெளிநாட்டில் உள்ள பல புதிய நிறுவனங்கள் உறுதிப்பாட்டுடன் உள்ளன. இது, இந்தியாவின் எதிர்கால வர்த்தக வளர்ச்சியை பெரிதும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!