அநுரவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்திற்கு தீ வைப்பு

News, அநுரமீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள அநுரவின் தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்திற்கு ஒரு குழுவினர் தீ மூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
அலுவலகத்தில் காணப்பட்ட மேசை நாற்காலிகள் மற்றும் விளம்பர பலகைகளுக்கு நேற்று மாலை நபர் ஒருவர் தீ வைத்ததாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

அலுவலகம் அமைந்துள்ள கட்டிடமும் தீயில் சேதமடைந்ததுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பானவை என்பதுடன், பாரதூரமான சம்பவங்கள் தொடர்பில் எந்தவொரு முறைப்பாடும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரிவுகளுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை பொலிஸ் தலைமையகத்தில் உள்ள விசேட தேர்தல் அலுவலகத்தில் நாளாந்த அடிப்படையில் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Facebook | WhatsApp | sarinigar

Leave a Reply