அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யாஉக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கு வழியமைததன் மூலம் மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு நடந்தால் அது ஐரோப்பாவுடன் மட்டுப்படுத்தப்படாது என்று ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் நகரில் கடந்த 6-ம் தேதி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.

Facebook | WhatsApp | sarinigar

Leave a Reply