அம்மா என்றால் அன்பு! அப்பா என்றால்?

அம்மா என்றால் அன்பு! அப்பா என்றால்?
அம்மா… என்றால் அன்பு!
அப்பா என்றாலும் அன்பு தானே…?
ஏன் இதை நாம் கற்றுக் கொடுக்க மறந்தோம்?

பொதுவாக அப்பாகளை தப்பாகவே புரிந்து கொள்ளும் நிலையில் தான் பலர் இருக்கின்றார்கள்?

ஒரு குடும்பத்தின் ஆடம்பர அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தும் கண்டிப்பான நபராக தெரிவதால் அப்பாக்கள் மீது ஒரு கோபம்!

மீசை அரும்பும் வயதில் டீன் ஏஜ் பசங்களுடன் பாதையில் லூட்டி அடிக்கும் வேளை அதைப் பார்க்கும் அப்பாக்கள் துடித்துப் போய், போடா வீட்டுக்கு ராஸ்கல்… என்று வாத்தியாக, கண்டிக்கிறார்களே அதனாலா…?

ஏன்…? அப்பாகள் என்றாலே இந்த தப்பான பார்வை?

சில அம்மாக்கள் தன் பிள்ளைகளுக்கு அவனது அப்பாவை வில்லன்களாக சித்தரித்துக் காட்டும் விபத்தாக இருக்குமோ…?

இனி மேலாவது அம்மா என்றாலும் அப்பா என்றாலும் அன்பு என்று கற்றுக் கொள்ளுவோம் கற்றுக் கொடுப்போம்!

முஸ்லிம் முரசு

Leave a Reply