மாத்தறை – கம்புறுபிட்டிய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (02) மொட்டுக் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்தத முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலரால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் தான் நாட்டை நாசமாக்கியமாக அங்கிருந்த தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் சத்தமிட்டனர்.
அவ்வேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அதற்கடுத்து, பொலிஸாரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், அவ்விடத்தில் ஒன்றுகூடிய பொது மக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி ஊ… சத்தமிட்டு, அவர்களின் கடந்த கால அரசியல் கூத்துக்களை சுட்டிக்காட்டி திட்டித் தீர்த்தனர்.
0