அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று…

Daughters, அரசியல்அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று அதை ஒதுங்கிவிடாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள் அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களது அதிகாரங்களும் உரிமைகளும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது!

தெரிந்து கொள்ளுங்கள் அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களது சுதந்திரமும் நீதியும் நியாயமும் ஒழித்து வைக்கப்பட்டுருக்கின்றது!

புரிந்து கொள்ளுங்கள் அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களது பதவியும் பாதுகாப்பும் எதிர்காலமும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது!

ஏனெனில் யாரும் அந்த அரசியல் சாக்கடையை சகித்துக்கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள் என்பதால்! நீதியை நிலை நாட்டுவதற்கு இவ்வுலகில் படைக்கப்பட்ட சமுதாயமே…. சகித்துக் கொள்வோம் பொறுத்துக் கொள்வோம் அரசியல் எனும் அந்தச் சாக்கடையை!

முயற்சி செய்வோம் மூழ்கி எடுப்போம், மறுக்கப்பட்ட நமது உரிமைகளை! நமக்காக அல்ல! எமது வாரிசுகளாவது எதிர்காலத்தில் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்!

உன்னத அரசியல் பாதையை உலகம் வியந்து பார்கட்டும்! மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாறு, இனியாவது நமக்காக திரும்பட்டும்! ஒதுக்கி விடாதீர்கள் நீங்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவீர்கள்! வெறுத்துவிடாதீர்கள் உங்கள் வாழ்வுரிமையையே இழந்து விடுவீர்கள்!

உரிமை மீட்பு போராட்டம் என்பது அரசியல் எழுச்சியே! தாய் நாட்டின் அபிவிருத்திற்கும், இன மத சமூக ஒற்றுமைக்கும் நமது வாக்குகளை ஜனநாயக ஆயுதமாக பயன்படுத்துவோம்.

 

|➥  Facebook
|➥  WhatsApp
|➥  Sarinigar – Contact Us

Leave a Reply