1
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது அண்ணாவின் மகனை தனக்கு கீழ் பணிக்கு அமர்த்தி , அண்ணனின் மகனின் சம்பளத்தையும் முழுதாக தானே எடுத்துக் கொள்வதாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள நிலையில் அது தொடர்பில் பலரும் விமர்சங்களை முன் வைத்து வருகின்றனர்.
ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அருச்சுனா இராமநாதன் , அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி , அவரின் சம்பளத்தையும் மோசடியாக தானே பெற்றுக்கொள்வது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை
இதனால் தனக்கு கீழ் நியமிக்க வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபா பணத்தை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே தனது செலவீனங்களை ஈடுசெய்வதாக தெரிவித்திருக்கிறா
அதேவேளை தனது மகனின் பாடசாலை கல்வி செலவு , கொழும்பில் உள்ள வீட்டின் வாடகை செலவு என்பன உட்பட தனது ஆடைகளுக்காகவே 70 ஆயிரத்திற்கு மேல் செலவு உள்ளதாகவும். அதனால் தான் தனக்கு கீழ் நியமிக்கப்பட கூடிய ஆளணியில் அண்ணாவின் மகனை நியமித்து அந்த சம்பளத்தை முழுமையாக பெற்றுக்கொண்டாலும் தனது வாழ்க்கை செலவினை ஈடு செய்யமுடியாது திண்டாடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளமை தொடர்பில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்