ஆசிய மகளிர் கிரிக்கெட் ​போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி

ஆசிய மகளிர் கிரிக்கெட் ​போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெற்றி

2024 ஆசிய மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை தோற்கடித்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வென்றது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் ஜூலை 28 அன்று தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தாலும், முதல் முறையாக ஆசிய மகளிர் கிண்ணத்தை கைப்பற்றியது.

டாஸ் வென்று முதலில் துடிப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை எடுத்தது.

இருப்பினும் இலங்கை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை எடுத்து வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக அணித் தலைவி சாமரி அத்தபத்து 63 பந்துகளில் 61 ஓட்டங்களையும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும் பெற்றனர். கவிஷா தில்ஹாரி 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Leave a Reply

error: Content is protected !!