நாட்டில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதால் எதிர்வரும் நாட்களில் முகக்கவசங்களை அணியுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துக் காணப்படும் என நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இன்றையதினம்(04.02.2025) காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128இற்கு இடைப்பட்ட அளவில் காணப்படும் என கூறப்படுகின்றது.
எனினும், வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் இருக்கும்.
இந்நிலையில், இயலுமான வரை, முகக்கவசங்களை அணியுமாறும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கோரியுள்ளது.
The post இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை appeared first on LNW Tamil.