ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது . ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியிலேயே இன்று (17) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டிடத்தின் பெரும்பகுதி தீப்பிடித்து எரிவதையும், புகை மூட்டங்கள் வெளியேறுவதையும் காட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வௌியாகியுள்ள நிலையில் இது தொடா்பான ஆரம்ப விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் எனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் தீவிபத்து – 50 போ் பலி appeared first on Global Tamil News.