உடனடிக் கடன் வழங்கும் Online App வலையில் மாட்டிக் கொண்டீர்களா? 0

கடன்
இந்த நாட்களில் நாம் சமூக ஊடகங்களுக்குச் செல்லும்போது, ​​​​நாம் காணக்கூடிய மிகவும் பொதுவான விஷயம் என்னவென்றால், உடனடி கடன்களை வழங்கும் இந்த Online App ள்தான்.
இதில் கடன் வாங்குவது மிக எளிது, ஆனால் அந்தக் கடனை அடைக்க சென்றால் அது புலி வாலை பிடித்த கதையாகத்தான் உள்ளது.
எந்தவித தேடுதலும் வரையறைகளுமின்றி வாங்கப்படும் இந்தக் கடனால் சில குடும்பங்கள் உயிரைக் கூட விலையாகக் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்ற துக்ககரமான செய்திகள் இப்போது வௌிவந்தமுள்ளன.
Online App மூலம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்ட குடும்பத்தைப் பற்றிய இந்த சோகமான சம்பவமொன்று கேரள மாநிலத்தின் கடமக்குடி பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.
நிஜோ மற்றும் ஷில்பா என்ற இளம் தம்பதியினர் தங்களது 7 வயது மற்றும் 5 வயது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தங்கள் வீட்டிற்குள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Online App மூலம் வாங்கிய கடனை கட்ட முடியாமல் போன வேளை குறிப்பிட்ட Online App மூலம் வந்த கடும் மிரட்டல் செய்திகளே இத் தற்கொலைக்கு காரணம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எதுவுமே அறியா குழந்தைகளும் உயிரிழந்துள்ள இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் தொடர்பில் இந்திய பொலிஸாரின் பார்வை தற்போது இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.
ஏனெனில் ஷில்பா மற்றும் அவரது உறவினர்களுக்கு நம் நாட்டில் உள்ள ஒரு தொலைபேசி எண்ணில் இருந்தே இந்த மிரட்டல் செய்திகள் வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணையத்தினூடாக உடனடி கடனை வழங்கும் இந்த குழு இலங்கையில் இருந்து இயங்கி வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு விளம்பர உத்திகள் மூலம் மக்களிடம் செல்லும் இந்த உடனடிக் கடனை செயலிகள் மற்றும் இணையத்தளங்களுக்கு ஏதேனும் கட்டுப்பாடு உள்ளதா?
இவற்றை யார் நடாத்துவது.? அல்லது எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இந்த நிறுவனங்கள் செயற்படுகின்றதா? இதனால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகள் குறித்து மக்களுக்கு போதிய அறிவு உள்ளதா?
பிரமிட் திட்டம் உட்பட மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் பல ஏமாற்றுத் திட்டங்களில் பணத்தைப் போட்டு, அதில் மாட்டிக் கொண்ட பின்னர் மக்களை உடனடிக் கடனின் வலையில் சிக்க வைப்பது சமீபத்திய முறையாக உள்ளது.
குதிரை ஓடிய பிறகு தொழுவத்தின் கதவை மூடி என்ன பயன்? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்? பொறுப்பில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

Leave a Reply