உலகப் புக‌ழ்பெ‌ற்ற நாத்திகர்கள் மரணப் படுக்கையில் என்ன சொன்னார்கள்..?

உலகப் புக‌ழ்பெ‌ற்ற நாத்திகர்கள் மரணப் படுக்கையில் என்ன சொன்னார்கள் தெரியுமா:

👉 வால்டேர் என்பவர் புகழ்பெற்ற பிரெஞ்சு நாத்திக எழுத்தாளர். பிரெஞ்சு புரட்சிக்காக பெரும் பங்காற்றியவர், மதம் வேறு, அரசியல் வேறு என்ற கருத்தில் உறுதியாக நின்றவர். 

மரணப் படுக்கையில் தனது மருத்துவரிடம் கூறியதாவது: 

‘ஆண்டவனும் என்னை கைவிட்டுவிட்டான். மக்களும் என்னை புறக்கணித்து விட்டனர். ஆறு மாதங்களுக்கு என் உயிரை தக்க வைத்து தாருங்கள்! என் பாதி சொத்தை தருகிறேன். நான் இறக்கப்போகிறேன், நான் நரகத்தை கண் முன் காண்கிறேன்’

👉 ஆங்கிலேய நாத்திகர் சர் தாமஸ் மரணப்படுக்கையில் கூறியதாவது: 

‘இவ்வளவு காலமாக நான் கடவுளை நம்பவில்லை, நரகத்தையும் நம்பவில்லை. ஆனால் இப்போது நான் கடவுள் இருப்பதாக உணர்கிறேன், இப்போது நான் நரகத்தின் விளிம்பில் இருப்தாக உணர்கிறேன்.’

👉 சார்ச் ஆஃப் என்பவர் “சாத்தானின் பைபிள்” என்ற நூலின் ஆசிரியர். அவர் மரணப்படுக்கையில் கூறியதாவது:

‘நான் மகா பாதக செயலை செய்துவிட்டேன். ஆண்டவன் என்னை மன்னிக்காவிட்டால் நான்  நாசமானவர்களில் ஒருவன் என்பதில் ஐயமில்லை’.

👉 பிரான்சு மன்னர் ஏழாம் சார்லஸ், பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தவர். தனது மரணப்படுக்கையில் கூறியதாவது: 

‘நான் கொன்றவர்கள் என் கண் முன்னால் வந்து செல்கின்றனர். என் கெட்ட முடிவை நான் காண்கிறேன்’.

👉 தத்துவஞானி தாமஸ், இறக்கும் தருணத்தில் கூறியதாவது: 

‘நான் இருண்ட பாதளத்தில் குதிக்கப் போகிறேன், இந்த நேரத்தில் இந்த உலகம் என் கைவசம் இருந்தால், ஒரு நாள் மாத்திரம் உயிர் வாழ அதை கொடுப்பேன்’.

👉 நாத்திக எழுத்தாளர் மாஸ் பெய்ன் கூறும்போது: 

‘எனக்கு இந்த உலகமும் அது போன்றதும் இருந்தால், நான் அதை கொடுத்து இந்த வேதனையில் இருந்து தப்பிப்பேன். என்னை தனியே விடாதீர்கள்! நான் நரக  விளிம்பில் இருக்கிறேன். சைத்தானின் நண்பனாக நான் இருந்தேன்’.

👉 பிரபல இஸ்கட்லாந்து நாத்திகரும் வரலாற்றாசிரியருமான டேவிட் ஹியூம் இறப்பதற்கு முன் கூறியதாவது: 

‘என்னை காப்பற்றுங்கள்! நரக நெருப்பு என்னை சுடுகிறது.’ 

அவரை பார்த்தவர்கள் அவர் மிகவும் பரிதாபப்படும் நிலையில் இருந்ததாக கூறியுள்ளனர்.

👉 பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்டே உலகை ஆளும் வெறியில் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றார். மரணபடுக்கையில் அவர் கூறியதாவது:

‘என் நேரம் வர முன்பே நான் சாகப்போகிறேன். மண்ணோடு மண்ணாகப் போகிறேன். நான்தான் மிகப்பெரிய பேரரசரன், நான் விழும் நரக பாதளத்துக்கும்  சொர்க்க சோலைகளுக்கும் பெரும் தூரம் உள்ளது’.

👉 👉 அமெரிக்க பத்திரிகையான நியூஸ்வீக்கிற்கு அளித்த பேட்டியில், ரஷ்ய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா ஸ்டாலின், அவரது மரணம் பற்றி வர்ணிக்கும் போது:

‘என் தந்தையின் மரணம் ஒரு பயங்கரமாக இருந்தது. அவர் திடீரென்று கண்களைத் திறந்து பார்ப்பார், வெறித்தனமாக கோபமடைவார், மேலே பார்ப்பார், தனது இடது கையால் மேலே ஏதோ ஒன்று இருப்பதாக சைகை செய்வார். ஏதோ ஒன்று இருப்பதாக எச்சரித்துவிட்டு மரணித்தார்”.

👉 டியூக் செசரே போர்கியா என்பவர் ‘இளவரசன்’ என்ற நாவலில் ஆசிரியர்.

அவர் தனது மரண அவஸ்தையில் சொன்னதாவது:

“எதனையும் முகம் கொடுக்க தயாராக இருந்தேனே!, இப்போது இந்த மரணத்துக்கு முகம் கொடுக்க தயாராக இல்லையே”.

👉 சார் பிரான்சிஸ் நியூபெர்ட் என்பவர். பிரிட்டிஷ் நாத்திகர்கள் சங்கத் தலைவர். அவர் இறக்கும் போது படுக்கையைச் சுற்றி இருந்தவர்களிடம் இப்படி கூறினார்:

“கடவுள் இல்லை என்று என்னிடம் சொல்லாதீர்கள், நான் இப்போது அவன் முன்னிலையில் இருக்கிறேன். நரகம் இல்லை என்று சொல்லாதீர்கள், நான் இப்போது அதன் பாதாளத்தில் தொலைந்து விழுவதாக உணர்கிறேன். உங்கள் பேச்சை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். கோடி வருடங்கள் கடந்தாலும் அதன் வேதனையில் இருந்து எனக்கு விடுதலை இல்லை! ஐயோ சுட்டெரிக்கும் நரகமே!”.

👉 டேவிட் ஸ்ட்ராஸ் என்பவர் 1874 இல் இறந்த ஜெர்மன் நாத்திக எழுத்தாளர். அவர் தனது மரணப்படுக்கையில் கூறினார்: 

“என் தத்துவங்கள் என்னைத் கைவிட்டுவிட்டதே! நான் இப்போது கோரப்பட்களைக் கொண்ட ஒரு ராட்சத இயந்திரத்தின் தாடையில் அகப்பட்டதாக உணர்கிறேன். அது எந்த நேரத்தில் என்னை அரைத்து நசுக்கும் என்று தெரியவில்லை”.

👉 புஷ், தந்தை மகன் என ட்ரம்ப், புடின், மற்றும் அரேபிய கொடுங்கோலர்கள், அப்பாவி மக்களின் இரத்தத்தை ஓட்டியவர்கள் தங்களது மரணப்படுக்கையில் என்னெவெல்லாம் உளறப் போகிறார்கள் என்பதை வரலாறு பதிந்து வைக்கத்தான் போகிறது!

👉 வான்மறை  வசனம் ஒன்று இப்படிச் சொல்கிறது:

((யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை (காணும் வரை) அல்லது மறுமையை காணும்வரை பேரருளாலன் (அர்ரஹ்மான்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்;

(அவ்வாறு காணும் போது) எவருடைய தங்குமிடம் கெட்டது; எவருடைய படை பட்டாளம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” 

என்று (நபியே!) நீர் கூறுவீராக.))

📖 அல்குர்ஆன் : 19:75

✍ தமிழாக்கம் / imran farook

நன்றி

Leave a Reply