உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் உயர்வு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள லான்செட் சுவாச மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடையே அடினோகார்சினோமா எனப்படும் ஒரு வகை நுரையீரல் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

அந்தப் புற்றுநோய் நிலையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 53 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த நோய் பெண்கள் மற்றும் ஆசிய மக்களிடையே அதிகமாகக் காணப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!