140 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் மக்களின் பதில்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட அறிக்கை, வயதுக் குழுக்களின் படி தனித்தனியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, இரண்டாவது இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாவது இடம் ஐஸ்லாந்துக்கும் கிடைத்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, அமெரிக்காவும் ஜெர்மனியும் உலகின் மகிழ்ச்சியான 20 நாடுகளின் பட்டியலில் இல்லை, ஆனால் குவைத் மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகள் முதல் 20 நாடுகளின் பட்டியலில் உள்ளன என்று உலகின் மகிழ்ச்சியான நாடுகள் என்ற அந்த அறிக்கை கூறுகிறது.
143 நாடுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் இடம் பெற்றுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையின் படி இலங்கை 128ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.