2
உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சிரேஷ்ட பொருளியலாளர் அன்ரனி ஒபேசேகரா தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பில் உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலமைகள், மீள்குடியேற்ற நிலமைகள், சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சனைகள் போன்ற விடயங்களை மாவட்ட செயலரிடம் கேட்டறிந்து கொண்டனர்.