எனது மகளை ஒரு ராணியைப் போல நடத்தினார்கள் – இஸ்ரேலிய தாயின் நன்றிக் கடிதம்

மகளை
இஸ்ரேலிய தாயின் நன்றிக் கடிதம்
காஸாவில் 49 நாட்கள் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது தனது மகள் எமிலியாவுக்கு அளித்த கவனிப்புக்காக ஹமாஸ் போராளிகளுக்கு நன்றி தெரிவித்து டேனியல் அலோனி என்ற இஸ்ரேலிய பெண் ஒரு உணர்ச்சிகரமான கடிதத்தை எழுயுள்ளார்.

ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையணி தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் இந்த கடிதத்தைப் வௌியிட்டுள்ளது.

முற்றுகையிடப்பட்ட காஸாவில் டேனியல் அலோனி மற்றும் அவரது மகள் எமிலியா (5) ஆகியோர் ஹமாஸால் 49 நாட்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர்.

நவம்பர் 24 அன்று, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய தாயும் மகளும் விடுவிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களுடன் மீண்டும் இணைந்தனர்.

அவர்கள் காஸாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, டேனியல் அலோனி ஹமாஸுக்கு ஒரு “நன்றி” கடிதத்தை எழுதினார், “என் மகள் எமிலியாவிடம் காட்டிய அசாதாரண மனிதாபிமானத்திற்காக எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி கூறுகிறேன்.”

ஹீப்ரு மொழியில் டேனியல் எழுதிய கடிதத்தில், “நீங்கள் அனைவரும் அவளது நண்பர்களாக இருந்தீர்கள், அது சதாராண நண்பர்களாக மட்டுமல்லாமல், உண்மையிலேயே நீங்கள் அன்பானவர்கள் மற்றும் நல்லவர்கள் என்பதை அவள் (எமிலியா) உணர்வுபூர்வமாக அறிந்து கொண்டுள்ளாள்”.

காசாவில் பணயக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட நல்ல கவனிப்பை அலோனி பாராட்டியுள்ளார், மேலும் “பராமரிப்பாளர்களாக நீங்கள் செலவிட்ட பல மணிநேரங்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

“குழந்தைகள் சிறைப்பிடிக்கப்படக்கூடாது, ஆனால் உங்களுக்கும் வழியில் நாங்கள் சந்தித்த பிற அன்பான நபர்களுக்கும் நன்றி, என் மகள் காசாவில் ஒரு ராணியைப் போல உணர்ந்தாள்,”

“நீங்கள் எதிர்கொண்ட கடினமான சூழ்நிலை மற்றும் காசாவில் நீங்கள் சந்தித்த கடுமையான இழப்புகள் இருந்தபோதிலும் காட்டிய அன்பான நடத்தையை நான் நினைவில் கொள்வேன்.”

“இந்த உலகில் நாம் உண்மையிலேயே நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் நலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.” என்று டேனியல் அலோனி மேலும் தெரிவித்துள்ளார்.

ஹமாஸுக்கு டேனியல் எழுதிய ‘நன்றி கடிதத்தின்’ முழு வடிவம்

கடந்த சில வாரங்களாக என்னுடன் வந்த தளபதிகளுக்கு, நாளை நாம் பிரிவோம் என்று தெரிகிறது.

இருப்பினும், என் மகள் எமிலியாவிடம் காட்டிய அசாதாரண மனிதாபிமானத்திற்காக எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அவளை பெற்றோரைப் போல நடத்துனீர்கள், அவள் விரும்பும் போதெல்லாம் அவளை உங்கள் அறைக்கு அழைத்துக் கொண்டீர்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் அவளது நண்பர்கள் என்று அவளை உண்மையாக நேசித்த நண்பர்கள் என்று அவள் உணர்ந்துள்ளாள்.

நன்றி, நன்றி, மணிக்கணக்கில் குழந்தை பராமரிப்பாளராக செயல்பட்டதற்கு நன்றி. அவளுடன் நீங்கள் பொறுமையாக இருந்ததற்கும், இனிப்புகள், பழங்கள் இல்லாத போதும் கூட  அவளுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்தையும் கொடுத்ததற்கு நன்றி.

குழந்தைகளை சிறைப்பிடிக்கக் கூடாது, ஆனால் உங்களுக்கும் வழியில் நாங்கள் சந்தித்த பிற நல்ல மனிதர்களுக்கும் நன்றி, என் மகள் காசாவில் ஒரு ராணியைப் போல உணர்ந்தாள், மேலும் அவள் பொதுவாக உலகின் மையமாக உணர்கிறாள் என்பதை ஒப்புக்கொள்கிறாள்.

எங்கள் நீண்ட பயணத்தில், நாங்கள் பல்வேறு பதவிகள் மற்றும் தலைமைத்துவத்தைச் சேர்ந்த நபர்களை சந்தித்தோம், ஒவ்வொருவரும் அவளை மென்மையாகவும், அரவணைப்புடனும், அன்புடனும் நடத்தினார்கள்.

நீடித்த உளவியல் அதிர்ச்சியுடன் அவள் இங்கிருந்து வெளியேறாததால் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நீங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்கொண்ட கடினமான சூழ்நிலை மற்றும் காசாவில் நீங்கள் சந்தித்த கடுமையான இழப்புகளுக்கு மத்தியிலும் உங்கள் கனிவான நடவடிக்கைகளை நான் நினைவில் கொள்வேன்.

இந்த உலகத்தில் நாம் உண்மையிலேயே அன்பான நண்பர்களாக இருப்பதை வரவேற்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் நலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆரோக்கியம் மற்றும் அன்பை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மிகவும் நன்றி.
டேனியல் மற்றும் எமிலியா
23.11.2023

ஹமாஸுக்கு டேனியல் எழுதிய 'நன்றி கடிதத்தின்' முழு வடிவம்

டேனியல் அலோனி மற்றும் அவரது ஆறு வயது மகள் எமிலியா ஆகியோர் விடுவிக்கப்பட்ட முதல் குழுவில் அடங்குவர். விடுமுறைக்காக இருவரும் கிபுட்ஸ் நிர் ஓஸில் விடுமுறைக்காக தனது சகோதரியின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றபோது அவர்கள் ஹமாஸால் பனயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

பிணைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமைகள் அல்லது அவர்களின் உடல் மற்றும் உணர்ச்சி நலன் குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் கேட்பதற்கும், அவர்களின் பேட்டிகளை வௌியிடுவதற்கும் இஸ்ரேல் அரசாங்கம் முற்றாக தடை விதித்துள்ளது.

எனினும் டேனிலின் இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், ஹமாஸால் பிடித்துச் சென்று விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வௌியிட்டு வரும் தமது அனுப கருத்துக்களைக் கண்டு சியோனிச ஆட்சியின் ஆதரவாளர்கள் பதற்றமடைந்துள்ளதுடன், இது “புனையப்பட்ட” மற்றும் “ஹமாஸ் பிரச்சாரம்” என்று கூறிவருகின்றனர்.

அக்டோபர் 24 ம் திகதி மனிதாபிமான அடிப்படையில் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட வயதான இரண்டு இஸ்ரேலிய பெண்களில் ஒருவரான 85 வயதான யோசேவ்ட் லிஃப்ஷிட்ஸ் ஒரு ஊடக நேர்காணலில் உண்மை நிலவரங்களை பகிரங்கமாக கூறியதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் ஊடகளுக்கு கருத்து தெரிவிப்பதை இஸ்ரேல் அரசு தடை செய்துள்ளது.

“ஹமாஸ் எங்களை மென்மையாக நடத்தியது மற்றும் எங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தது” என்று லிஃப்ஷிட்ஸ் விடுதலைக்குப் பிறகு டெல் அவிவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்ரேலிய அரசின் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஹமாஸால் விடுவிக்கப்பட்ட சில பிணைக்கைதிகளின் உறவினர்கள் தங்கள் சிறைவாசத்தின் நிலைமைகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply