சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலையை இன்று (30) நள்ளிரவு முதல் குறைத்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.
ஆட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதன்படி, ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 317 ரூபாவாகவும் மண்ணெண்ணெய்யின் விலை 202 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.