இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாடு நடத்துவார். அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திய பிரதமரின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!