வறிய மக்களுக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிப்பதற்காக கடந்த வருடத்தில் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் கசாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு வழங்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்ட 15 இலட்சம் கிலோகிறாமிற்கு மேற்பட்ட உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உணவு ஆணையாளர் திணைக்களத்திற்குச் சொந்தமான வேயங்கொட களஞ்சியத் தொகுதியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருக்கையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டதோடு உரிய நேரத்தில் பகிர்ந்தளிக்க அப்போதைய அதிகாரிகள் தவறியதால் தற்போது மேற்படி உணவுகள் காலாவதியாகி உள்ளதாக மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன.
2