கடும் வெப்பமான காலநிலையினால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்

கடும் வெப்பமான காலநிலையினால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சூரிய ஒளி நேரடியாக தோலின் மீது படுவதால் தோலில் சில மாற்றங்கள் ஏற்படுவதாகவும் இங்கு தோல் எரியும் தன்மையை காணலாம் என்றும் கூறுகின்றனர்.

தோலில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றுதல், தோல் அரிப்பு, வியர்வையால் சீழ் கொப்புளங்கள், வியர்வை தேங்கும் இடங்களில் வட்ட வடிவ பூஞ்சை போன்றவை இந்த தொற்று நிலைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கூடுதலாக, தற்போதுள்ள தோல் ஒவ்வாமை நோய்கள் வெப்பமான காலநிலை காரணமாக அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக இளம் பிள்ளைகள் இந்நோய்க்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகவும், மருத்துவ ஆலோசனை பெறுவது கட்டாயம் என்றும் தோல் நோய் நிபுணர் டாக்டர் இந்திரா கஹாவிட்ட குறிப்பிட்டார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி இந்திரா கஹ்விட்ட,

“குறிப்பாக பூஞ்சை தொற்றுக்கு மருந்துக் கடைக்குச் சென்று ஏதாவது மருந்து கேட்காதீர்கள். அவ்வாறு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்க முயற்சித்தால், பூஞ்சை நோய்களுக்கான சரியான சிகிச்சையைப் பெற முடியாமல் போகலாம்.”

“இப்படிப்பட்ட நேரத்தில் குழந்தைகளை சூரிய வெப்பத்திற்கு பழக்கபடுத்த வேண்டும் என்ற எண்ணம் புத்திசாலித்தனமான விஷயம் அல்ல. ஏனெனில் இந்த கடினமான வெப்பமான காலநிலையை சமாளிப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் கடினம்.”

Leave a Reply

error: Content is protected !!