காத்தான்குடியில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் ஓட்டமாவடி, வாழைச்சேனையிலிருந்து 30 பாடசாலை மாணவர்கள் 1000 பேர் இந்த வேண்ட் வாத்திய அணிவகுப்பில் பங்கு பற்றியிருந்தனர்.

காத்தான்குடி தொடக்க எல்லையிலிருந்து வேண்ட் வாத்தியங்கள் முழங்க காத்தான்குடி பிரதான வீதியூடாக வந்து கிஸ்புள்ளா கலாச்சார மண்டபம் வரை அணிவகுப்பாக வந்து முடிவடைந்தது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!