காலி விளையாட்டு மைதானத்தில் வோர்ன் – முரளிக்கு கௌரவம்

– முதல் கையொப்பத்தை பதித்த பர்வீஸ் மஹ்ரூப்
காலி விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ‘வோர்ன் – முரளி’ டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக, சுழல் ஜாம்பவான்களான வோர்ன் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் படங்கள் அடங்கிய சிறப்பு பலகையொன்று மைதானத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் 2 முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான வோர்ன் (Shane Warne) மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் திறமைகளை கௌரவிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது,

இதனடிப்படையில் குறித்த போட்டி நிறைவடையும் வரை இப்பலகையில் பல பிரபலங்களும் தங்களது கையெழுத்துக்களை பொறிக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான பர்வீஸ் மஹ்ரூப், பலகையில் தனது கையொப்பத்தை முதலில் பதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thinakaran WhatsApp Channel 1

𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕ X 👉 x.com/ThinakaranLK
⭕ Telegram 👉 t.me/ThinakaranLK

The post காலி விளையாட்டு மைதானத்தில் வோர்ன் – முரளிக்கு கௌரவம் appeared first on Thinakaran.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!