வடக்கு காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தரைவழி நடவடிக்கையின் போது பாலஸ்தீன கட்டிடத்தை ஜெப ஆலயமாக மாற்றியுள்ளனர்.
ஜெருசலேம் போஸ்ட் புதன்கிழமை வெளியிட்ட செய்தியில், “தரைவழி படையெடுப்பின் போது இஸ்ரேலிய வீரர்கள் காசாவின் மையத்தில் ஒரு ஜெப ஆலயத்தை நிறுவியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
மாற்றப்பட்ட குறிப்பிட்ட கட்டிடத்தின் இருப்பிடத்தை ஜெருசலேம் போஸ்ட் செய்தித்தாள் குறிப்பிடவில்லை, ஆனால் நுழைவாயிலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது, அதில் “ஆபிரகாம் கோயில்” என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பலகை நிறுவப்பட்டுள்ளது. மற்ற புகைப்படங்கள் உட்புறத்தில் இருக்கைகள் மற்றும் யூத மத புத்தகங்கள் கொண்ட ஒரு மேஜை ஆகியவற்றைக் வௌியிட்டுள்ளது.
“இஸ்ரேலிய வீரர்கள் ஒரு கட்டிடத்தை அவர்கள் பிரார்த்தனை செய்வதற்கான இடமாக மாற்றியுள்ளார்கள். அவர்கள் தங்கள் மத புத்தகங்களை வைப்பதற்கு தேவையான தளபாடங்களையும் வைத்துள்ளனர்”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.