தோஹாவில் நடந்த வளைகுடா உச்சிமாநாட்டின் முடிவில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவர்கள் காஸா முனை மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை கண்டித்ததோடு, உடனடியாக போர் நிறுத்ததை வலியுருத்தியுள்ளனர்.
அனைத்து மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான அணுகலை வழங்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளின் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும், காசா மக்களுக்கு எரிபொருள், உணவு மற்றும் மருந்து நுழைவதை அனுமதிக்க வேண்டும் என உச்சிமாநாட்டின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயல்பாட்டில் பங்கேற்க சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மனிதாபிமான உதவிகளை சட்டவிரோதமாக தடுத்தல், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட போர் முறையாக பொதுமக்களின் பட்டினியைப் பயன்படுத்துவதைக் கண்டிக்கும் பாதுகாப்பு கவுன்சிலின் 2018 மே 24 இன் தீர்மானத்தை மீறி சட்டவிரோத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ø காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கான் யூனிஸ் மற்றும் நுசைராத்தில் பலர் உயிரிழப்பு
தெற்கு காசா முனையில் உள்ள கான் யூனிஸில் உள்ள பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் விளைவாக செவ்வாய்க்கிழமை காலை 40 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஜபல்யாவில் உள்ள வீடுகளை குறிவைத்து ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இரானுவம் நடாத்திய தாக்குதல்களில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போர் விமானங்கள் வடக்கு காசா முனையில் கடும் தாக்குதல்களைத் தொடங்கின, மேலும் சில தாக்குதல்கள் கமல் அட்வான் மருத்துவமனைக்கு அருகாமையில் நடந்துள்ளது,
அக்டோபர் 7 முதல், ஆக்கிரமிப்பு இஸ்ரேல் காசா முனையில் ஒரு பேரழிவுகரமான போரை நடத்தி வருகிறது, இதில் 15,899 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 42 000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் உள்கட்டமைப்பின் பாரிய அழிவு மற்றும் முன்னெப்போதும் இல்லாத மனிதாபிமான பேரழிவு ஆகியவை அடங்கும் என்று அதிகாரப்பூர்வ பாலஸ்தீன மற்றும் ஐ.நா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Ø ஆக்கிரமிப்பிற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு காஸா குடியிருப்பாளர்கள் சுகாதார பேரழிவை எதிர்கொள்கின்றனர்
இரண்டு மாத கால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதல்களினால் பல மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகள் அழிக்கப்பட்டதன் விளைவாக மக்கள் எதிர் கொண்டுள்ள பேரழிவுகரமான நிலைமைகள் குறித்தும், ஆம்புலன்ஸ் மற்றும் காயமடைந்தவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை மீட்பதற்கு தேவையான அடிப்படை கருவிகள் பற்றாக்குறை சம்பந்தமாக காசாவில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காஸா சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா கூறுகையில், தொடர்ச்சியான கொடூரமான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை காஸாவின் சுகாதார அமைப்பை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இரானுவம் பல மருத்துவ பணியாளர்களை கைது செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்ய ஐக்கிய நாடுகள் சபையும், உலக சுகாதார நிறுவனமும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அஷ்ரப் அல்-கித்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக திட்டமிட்ட இனப் படுகொலைக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது என்றும், மருத்துவமனைகளுக்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் இறந்துவிட்டதா காசாவில் உள்ள சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் முனீர் அல்-பார்ஷ் தெரிவித்துள்ளார்.
காசா முனையில் தற்போதைய வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு இல்லாமையினால் காசா மீது இஸ்ரேலிய குண்டுவீச்சால் கொல்லப்பட்டதை விட தொற்று நோய்கள், பராமரிப்பு இல்லாமையினால் அதிகமான மக்கள் உயிரிழக்கலாம் என்று அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் காசா முனையில் ஒரு சுகாதார பேரழிவு குறித்து எச்சரித்துள்ளார்.
Ø இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் எல்லையற்ற ஆதரவு
காசா முனை மீதான இஸ்ரேலிய போருக்கு ஆதரவளிப்பதால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் கடும் உள்நாட்டு எதிர்ப்பை எதிர்கொண்டாலும், அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலுக்கு அதிக இராணுவ வளங்களை அனுப்புவதற்கான தனது விருப்பத்தை பல முறை உறுதிப்படுத்தியுள்ளார்.
வாஷிங்டன் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது, மேலும் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்குவது உட்பட “தன்னை தற்காத்துக் கொள்ள” தேவையான டெல் அவிவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தயாராக உள்ளது என்று பைடன் தனது கருத்துக்களில் கூறியிருந்தார்.
இந் நிலையில் போருக்குப் பிறகு காஸாவின் எதிர்காலத்திற்கான அமெரிக்க திட்டத்தின் அம்சங்களை பற்றி பைடன் நிர்வாகம் தற்போது திட்டமிட்டு வருவதாக வௌ்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.