2
குருநகர் தூய காணிக்கை அன்னை (புதுமை மாதா) ஆலய 2025ம் ஆண்டுத் திருவிழா பங்குத்தந்தை அருட்பணி அ. ஜொ. யாவிஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்துதலில் இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியினை யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையேற்று நிறைவேற்றினார்.
“அன்னை மரியாள் எப்போதும் தனது வாழ்வில் தன்னை முதன்மைப்படுத்தியதில்லை, பிறரை மையப்படுத்தி, பிறருக்காகவே வாழ்ந்தாள். தனக்கென்று இருந்ததையே இறைவனுக்கு காணிக்கையாகக் கொடுத்தாள். ஆனால் அவளுக்கு கொடுக்கப்பட்ட ஆசீர் அவளது மனதையே வியாகுலப்படுத்தியது, இருந்தபோதிலும் அவள் கலக்கமுறாது அனைத்தையும் மனதிலிருத்தி தியானித்து இறைவனோடு நெருக்கமான உறவைப்பேணினாள். ஏனவே அவளது பிள்ளைகளாகிய நாமும் பிறருக்காக வாழவும், இறைவனுக்கு எம்மையும், எமக்குள்ளவற்றையும் காணக்கையாக்கவும் முன்வரவேண்டும்.” என தனது மறையுரையில் குறிப்பிட்டார்.
திருப்பலியின் நிறைவில் ஆயரினால் திருச்சொரூப ஆசீர் வழங்கப்பட்டது.மாலை திருச்சொரூப பவனியும், அதனைத்தொடர்ந்து திருச்சொரூப ஆசீரும் வழங்கப்பட்டது.