குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு – 10,000 நபர்கள் வௌியேற்றம்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு
குவைத்தில் வேலைக்குச் சென்று, செல்லுபடியாகும் விசா காலம் கடந்து, சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு, 2024ஆம் ஆண்டுக்கான குவைத் அரசாங்கம் வழங்கிய “மன்னிப்புக் காலத்தை” பயன்படுத்தி 10,615 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

குவைத் அரசின் வெளிவிவகார அமைச்சும் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடத்திய கலந்துரையாடலின் விளைவாக, இந்த பொது மன்னிப்புக் காலம் 2024 மார்ச் 17 முதல் 2024 ஜூன் 30 வரை வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட காலத்தில், சில ஆவணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, நாட்டை விட்டு வெளியேற “தற்காலிக கடவுச்சீட்டுகள்” வழங்கப்பட்டன. குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் திரு.காண்டீபன் பாலசுப்ரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தூதரக அதிகாரிகளினால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குவைத்தில் இருந்து வெளியேறும் இலங்கையர்கள் “சிறப்பு தள்ளுபடியுடன்” சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை பெறுவதற்காக, குவைத்தில் உள்ள இலங்கை தூதரக வளாகத்தில் ஒரு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளை விற்கும் ஏனைய முகவர் நிலையங்கள் நிறுவப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply