கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்!

கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த  பெண்ணொருவர்  திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நிலையில் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்துள்ளார்.

மேற்படி விடுதியில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 24 வயதுடைய குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய இருவரும் ஜேர்மனைச் சேர்ந்த தம்பதியினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!