ஐக்கிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதல் கருத்து வேறுபாடுகள் காரணமாக மூன்று குழுக்களாக பிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கருத்து வேறுபாடுகள் அடிதடி தாக்குதல்களாக விரிவடைந்தமையால் கடந்த 22 ஆம் திகதி வௌியிட தீர்மானிக்கப்பட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனம் பிற்போடப்பட்டுள்ளது.
கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன மற்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் ஒரு குழுவிலும் எதிர் அணியில் சுஜீவ சேனசிங்க மற்றும் கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோர் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு தரப்பினரையும் எம்.பி. மரிக்கார் எதிர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கட்சிக்குள் இருந்தவாறு ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தை செயல்படுத்துகின்றாரா என்ற சந்தேகம் கட்சிக்குள் எழுந்துள்ளது.
இதேவேளை, தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுவதை தாமதப்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.