பட்ஜெட்டுக்கு ஏற்ற போர்ட்டபிள் லேப்டாப்கள்:
1. லெனோவா V15 இன்டெல் செலரான் N4020:
Lenovo V15 என்பது மலிவான மற்றும் அல்ட்ராலைட் லேப்டாப் ஆகும். இது வெப் ப்ரொவ்சிங், ஈமெயில் செக்கிங் மற்றும் டாக்குமெண்ட் எடிட்டிங் போன்ற அடிப்படை செயல்பாடுகளுக்கு ஏற்றது. குறிப்பாக இந்த லேப்டாப் ஆனது மாணவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
முக்கிய அம்சங்கள்:
15.6 இன்ச் HD டிஸ்ப்ளே
இன்டெல் செலரான் N4020 ப்ராசசர்
4ஜிபி ரேம் மற்றும் 256GB SSD
இன்டகிரேட்டட் இன்டெல் UHD கிராபிக்ஸ்
லைட்வெயிட் மற்றும் அல்ட்ராபோர்ட்டபிள்
2. ஆப்பிள் 2022 மேக்புக் ஏர் லேப்டாப்:
ஆப்பிள் மேக்புக் ஏர் (2022) லேப்டாப் ஆனது பிரீமியம் அம்சங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பை விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
முக்கிய அம்சங்கள்:
13.3 இன்ச் ரெடினா டிஸ்ப்ளே
8-கோர் CPU உடன் Apple M1 ப்ராசசர்
8GB ரேம் மற்றும் 256GB SSD
ஆப்பிள் 7-கோர் GPU கொண்டுள்ளது
அல்ட்ராதின் மற்றும் அல்ட்ராபோர்ட்டபிள்
எனினும், மற்ற லேப்டாப்களுடன் ஒப்பிடும்போது இதன் விலை சற்று அதிகம்
3. HP 250 G8 (6G9R1PA) லேப்டாப்
HP 250 G8 லேப்டாப் ஆனது வேலை மற்றும் படிப்பைத் தேடுபவர்களுக்கு சரியான தேர்வாகும்.
முக்கிய அம்சங்கள்:
15.6 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே
இன்டெல் கோர் i3 ப்ராசசர்
8GB ரேம் மற்றும் 512GB SSD
இன்டெல் UHD கிராபிக்ஸைக் கொண்டுள்ளது
4. லெனோவா திங்க்பேட் E14:
லெனோவா திங்க்பேட் E14 என்பது உற்பத்தித் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை தேடுபவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.
முக்கிய அம்சங்கள்:
14 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே
இன்டெல் கோர் ஐ5 ப்ராசசர்
8GB ரேம் மற்றும் 256GB SSD
இன்டெல் UHD கிராபிக்ஸைக் கொண்டுள்ளது
எனினும், இது கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங்கிற்கு ஏற்றதாக இல்லை.
5. டெல் இன்ஸ்பிரான் 5630 13வது ஜெனரல் லேப்டாப்:
டெல் இன்ஸ்பிரான் 5630 என்பது வணிகம் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு விரும்புவோருக்கு ஒரு சிறந்த விருப்பமாகும். முக்கிய அம்சங்கள்:
14 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே
இன்டெல் கோர் i5 – 13th ஜென் ப்ராசசர்
8GB ரேம் மற்றும் 512GB SSD
இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸைக் கொண்டுள்ளது.
சிறந்த செயல்திறனுக்காக உங்கள் லேப்டாப்பை மேம்படுத்துவது எப்படி?
இன்றைய காலக்கட்டத்தில் ஊழியர்களும், மாணவர்களும் லேப்டாப்களை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். ஆனால், அவை ஸ்லோவாக இருப்பது இயல்பானதுதான். ஆனால் அதற்கு பதிலாக புதிதாக ஒன்றை வாங்குவதற்கு நிறைய பணம் செலவாகும். உண்மையில் இந்த பிரச்சனைக்கு புதிய லேப்டாப் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. சில எளிய நுட்பங்களை பின்பற்றினாலே போதும். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
1. ரேம்-ஐ அப்கிரேட் செய்யவும்:
பெரும்பாலான லேப்டாப்களில் 4GB அல்லது 8GB ரேம் உள்ளது. இது சிறிய பணிகளுக்கு பரவாயில்லை, ஆனால் 12ஜிபி முதல் 16ஜிபி ரேம் வரை அப்கிரேட் செய்வது மல்டிடாஸ்கிங்கை அதிவேகமாக்குகிறது. ஒரே நேரத்தில் பல புரோகிராம்களை பயன்படுத்துபவர்கள் அல்லது அதிக ஆப்ஸ்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அப்கிரேட் உதவும்.
இதையும் படிக்க: உங்க ஜிமெயில் பாஸ்வேர்ட் மறந்துபோச்சா…? எளிதில் மீட்டெடுக்க உதவும் 5 ஸ்டெப்ஸ் இதோ…!
2. HDDக்கு பதிலாக SSDஐ பயன்படுத்தவும்:
வழக்கமான ஹார்ட் டிரைவிற்கு (HDD) பதிலாக SSDஐ பயன்படுத்துவது லேப்டாப் வேகத்தை அதிகரிக்கும். SSD ஆனது லேப்டாப்பை உடனடியாக தொடங்கச் செய்கிறது மற்றும் பைல்களை விரைவாக மாற்றுகிறது. மேலும், SSDகள் ஆனது வேகமானவை, அதிக நம்பகமானவை, HDDகளை விட குறைவான பவரை பயன்படுத்துகின்றன மற்றும் நீண்ட நேரம் வேலை செய்பவை ஆகும்.
3. பேட்டரியை அப்கிரேட் செய்யவும்:
உங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுள் குறைந்து கொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்தால், புதிய பேட்டரியை வாங்க வேண்டும். ஒரு நல்ல தரமான புதிய பேட்டரி உங்கள் லேப்டாப்பின் ஆயுளை நீட்டிக்கும். புதிய பேட்டரி ஆனது லேப்டாப்பின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
இதையும் படிக்க: இந்தியாவில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ்.. விலை விவரம் இதோ!
4. லேப்டாப்பை சுத்தம் செய்ய வேண்டும்:
அழுக்கு மற்றும் தூசி துகள்கள் ஆனது கூலிங் சிஸ்டத்திற்குள் நுழைந்தால், லேப்டாப் அதிகமாக வெப்பமடைந்து மெதுவாக மாறும். எனவே, லேப்டாப்பை அடிக்கடி சுத்தம் செய்வது இந்த சிக்கலைத் தடுக்கும் மற்றும் சீராக இயங்கச் செய்யும்.
February 03, 2025 4:52 PM IST