இந்த நாட்களில் கொக்சகி (Coxsackie) எனும் வைரஸ் நோய் தொற்று ஒன்று பரவுவதால் சிறு பிள்ளைகளின் கை, கால் மற்றும் வாயில் நோய் தொற்று பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
சிறு பிள்ளைகளின் வாயைச் சுற்றிலும், முழங்கைகள் மற்றும் பிட்டங்களில் சிவப்பு கொப்புளங்கள் அல்லது வெள்ளை நீர் கொப்புளங்கள் தோன்றும் என்று அவர் குறிப்பிட்டார்.
இது மூன்று முதல் நான்கு நாட்களுக்கு குழந்தைகள் மத்தியில் பரவும் வைரஸ் என்பதால், இது மற்றவர்களுக்கும் தொற்றக்கூடியது என டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இந்த நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைகளை தூய்மையாகவும், மற்றவர்களிடம் இருந்து பிரித்தும் வைத்திருக்க வேண்டும் என்றும், பாடசாலைகள் அல்லது மழலையர் பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.