சீனா, ஹொங்கொங்கின் பொதிகள் சேவைக்கு தடைபோட்ட அமெரிக்கா!

மறு அறிவிப்பு வரும் வரை சீனா மற்றும் ஹொங்கொங்கில் இருந்து பொதிகள் சேவையை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க தபால் சேவை (USPS) தெரிவித்துள்ளது.

எனினும், இந்த இடைநீக்கத்தினால் கடிதங்கள் விநியோக சேவை பாதிக்கப்படாது என்று அமெரிக்க தபால் சேவையின் இணையத்தள அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

USPS இந்த முடிவிற்கான காரணத்தை வெளியிடவில்லை.

எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் மேலதிகமாக 10% வரி விதித்ததை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இதற்கு பதிலடியாக சீனா சில அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது வரியை அமல்படுத்துவதாக செவ்வாய்க்கிழமை (04) கூறியது.

அமெரிக்க நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கு (LNG) 15% மற்றும் மசகு எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் மேலும் சில பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்று சீனாவின் நிதியமைச்சு கூறியது.

அமெரிக்க ஏற்றுமதிக்கான புதிய கட்டணங்கள் பெப்ரவரி 10 ஆம் திகதி தொடங்கும் என்றும் சீனாவின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் (GOOGL.O)ஏகபோகத்திற்கு எதிரான விசாரணையைத் தொடங்குவதாகவும் சீனா கூறியது.

இதனிடையே, தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்காக டங்ஸ்டன், டெல்லூரியம், ருத்தேனியம் மற்றும் மாலிப்டினம் மற்றும் ருத்தேனியம் ஆகிய தனிமப் பொருட்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சகமும் அதன் சுங்க நிர்வாகமும் தனித்தனியாக தெரிவித்தன.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!