சீனாவில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் அமெரிக்க பங்குச் சந்தையில் செயல்படுவதாகவும், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகளவில் சீனா முன்னணியில் இருப்பதாக 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச எரிசக்தி நிறுவனம் வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 முதல் 2028 வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் சூரிய ஆற்றல் மூலம் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதில் சீனா ஆதிக்கம் செலுத்தும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனா 2060 ஜிகாவாட் மின்சாரத்தை புதிய புதுப்பிக்கத்தக்க திட்டங்களில் இருந்து உற்பத்தி செய்துள்ளது, உலகின் பிற அனைத்து நாடுகளும் ஒட்டு மொத்தமாக 1576 ஜிகாவாட் உற்பத்தி செய்துள்ளது.
இதற்கிடையில், உலக நிலக்கரி அடிப்படையிலான எரிசக்தி திட்டங்களில் 96% சீன நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.