சென்செக்ஸ் வீழ்ச்சி: முதலீட்டாளருக்கு ரூ.9.5 லட்சம் கோடி இழப்பு | Sensex crashes 931 points amid fears of trade war, recession

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு முடிவு உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு நாடுகளின் வர்த்தக அமைச்சகங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த முடிவு உலகளவில் வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது. பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான குழப்ப நிலை சர்வதேச சந்தைகளில் எதிரொலித்தது. குறிப்பாக, அதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவுடன் முடிவடைந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 931 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (-1.22%) 75,365 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 346 புள்ளிகள் குறைந்து (-1.49) 22,904 புள்ளிகளில் நிலைத்தது. லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். இதனால், உலோகம், மருந்து, ஐடி துறைகள் கணிசமான சரிவை சந்தித்தன. நிஃப்டி பார்மா 6.2 சதவீதம் வரை குறைந்து அதிர்ச்சியளித்தது.

நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.9.47 லட்சம் கோடி அளவுக்கு சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதன மதிப்பு ரூ.403.86 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!