ஜனாதிபதி செயலக வாகனம் விபத்து – நால்வா் காயம்

 

தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை   ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தொிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம்  (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புக்குத் திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள்   மற்றொரு வாகனத்தில் தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களின் சாரதி ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் இலங்கை  காவல்துறைப்  பணிபுரியும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்ககலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என    சந்தேகம் தொிவித்துள்ள தலாவ காவல்துறையினா்   மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!