உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது தெளிவாகிறது. இதற்குத் தீர்வாக, தென்னங் காணிகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக, தெங்குச் செய்கையை இலக்காகக் கொண்ட சிறந்த விவசாய நடைமுறைகள் (Good Agricultural Practices/GAP) பின்பற்றப்பட வேண்டும்.
மரங்களுக்கு இடையில் சரியான இடைவெளியைப் பேணுதல், சிறந்த சூரிய ஒளி, விளைச்சல் தராத மரங்களை அகற்றி புதிய மரங்களை நடுதல், ஊடுபயிர்ச் செய்கை, மண் பாதுகாப்பு, சிறந்த பீடை முகாமைத்துவம், சீரான போசணை மற்றும் திறனான நீர் விநியோகம் ஆகியன இங்கு முக்கிய காரணிகளாகக் காணப்படுகின்றன.
இலங்கையில் முறையாகப் பராமரிக்கப்படும், ஆரோக்கியமான தென்னை மரமானது, வருடாந்தம் சராசரியாக 100 முதல் 120 தேங்காய்கள் வரை அறுவடை தரும். அத்தகைய அறுவடையை உற்பத்தி செய்ய, ஒரு தென்னை மரத்திற்கு தினமும் சுமார் 60 லீற்றர் நீர் அவசியமாகிறது. மரத்தின் போசணை காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து, மண்ணின் வளம் படிப்படியாகக் குறைவதால், மரத்திற்குத் தேவையான போசணையை உரமாக வெளியிலிருந்து வழங்க வேண்டும். ஆயினும், ஆராய்ச்சிகளின் படி, இலங்கையில் தென்னை செய்கையாளர்களில் 30% ஆனோர் மாத்திரமே உரத்தையும், 10% எனும் சிறிய அளவிலானோரே நீரையும் வழங்குகின்றனர். இதன் காரணமாக, அன்றாட நீர் மற்றும் உரம் கிடைக்காத ஒரு தென்னை மரம் வருடாந்தம் 40-60 தேங்காய்களை மாத்திரம் உற்பத்தி செய்கிறது.
DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses, உள்ளூர் விவசாயத் தொழில் துறையில் நவீனத்துவத்தைப் புகுத்தி, முழு விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை செயற்படுத்தி வருகிறது. தென்னங் கன்றுகளை நடுவது முதல் அறுவடைச் செயன்முறை வரையான அனைத்து செயற்பாடுகளிலும், தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, அதன் தயாரிப்புகள் முழு விவசாயத் துறைக்கும் பல்வேறு தீர்வுகளை வழங்குகின்றது.
The post தெங்குச் செய்கையில் அதிக விளைச்சலுக்காக DIMO Agribusinesses இடமிருந்து வெற்றிகரமான தீர்வுகள் appeared first on Thinakaran.