ரக்பி சம்பியன்சிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடாத்தினார்கள். இவ்வருடத்திற்கான 20 வயதுற்குட்பட்டோருக்கான இறுதிப்போட்டி தென்னாப்பிரிக்காவின் சொந்த மைதானமான நெல்சன் மண்டேலா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் ஆக்ரோசமாக விளையாடினாலும் 17வது நிமிடம் வரை முழூமையாக போட்டியை தென்னாப்பிரிக்காவே ஆதிக்கம் செலுத்தியது.
18வது நிமிடத்தில் நியுசிலாந்து அணியின் ஹார்லின் சவுன்டாவின் அற்புதமான செயற்பாட்டினால் தனது முதல் பிரவேசத்தை காண்பித்து 5 புள்ளிகளை பெற்று அசத்தியது. பின்னரும் சிறப்பாக தொடர்ந்த நியுசிலாந்து வீரர்கள் தங்களது முழூத்திறமையையும் காண்பித்து அசத்தினார்கள்.
மீண்டும் கிடைத்த பந்தை சரியாக கையாண்டு ஹார்லின் சவுன்டா மேலும் 5 புள்ளிகளை பெற்றுக்கொடுத்து 19:10 புள்ளிகளை பெற்று நியுசிலாந்து அணி முன்னேற தொடங்கியது. பின்னர் 29வது நிமிடத்தில் தென்னாப்பிரிக்க அணி தனது மீள்பிரவேச்தை சிறப்பாக வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியளில் முன்னிலையை தொடர்ந்தது. 24:12 என்ற அடிப்படையில் இறுதிப்போட்டி சூடுபிடிக்க தொடங்கியது.
33வது நிமிடத்தில் நியுசிலாந்து அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிட்டிய நிலையில் அதனை திறம்பட கையாண்டு புள்ளிகளை அதிகரித்து கொண்டது,நியுசிலாந்து அணி 17:26 என முன்னேறி வந்தது. பின்னர் முதல் பாதியின் கடைசி தருணத்திலும் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர்ந்த நியுசிலாந்து வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு ஹார்லின் சவுன்டாவிடம் பந்தை கைமாற்ற அவர் முதல் பாதியிலேயே ஹட்ரிக் சாதனை படைத்து புள்ளிகளை அதிகரித்து கொடுத்தார். இதனால் முதல் பாதி 24:26 என முடிவடைந்தது.
தொடர்ச்சியாக ஆதிக்கத்தை தொடர்ந்த நியுசிலாந்து அணி 31: 26 என போட்டியில் முன்னிலைப்பெற்று அசத்தியது. சிறப்பான தொடக்கத்தை கொடுத்த தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நியுசிலாந்து அணியினரை சமாளிக்க முடியவில்லை சிறப்பாக எழுச்சிக் கண்ட நியுசிலாந்து வீரர்கள் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தினார்கள். 38: 26 என போட்டி முழூமையாக அவர்களின் பக்கம் சென்றதுஇ தனது சொந்த மைதானத்தில் நியுசிலாந்து வீரர்களின் ஆக்ரோஷத்தை தென்னாப்பிரிக்க வீரர்களால் சமாளிக்க முடியவில்லை.
இருந்தும் 49வது நிமிடத்தில் தென்னாப்பிரிக்க அணி தனது திறமையை காண்பித்து 5 புள்ளிகளை பெற்று அசத்தியது. ஒவ்வொரு ட்ரைகளும் முக்கியமானதாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த 31 புள்ளிகளை பெற்று போட்டியில் தனது மீள்வருகையை தென்னாப்பிரிக்க அணி காண்பித்தது. 55வது நிமிடத்தில் நியுசிலாந்து அணி 43 புள்ளிகளை பெற்று 12 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலைப்பெற்று அசத்தியது. ஒரு கட்டத்தில் 38: 43 என்ற நிலையில் போட்டி விறுவிறுப்பான கட்டத்திற்கு சென்றது. 20 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் நியுசிலாந்து அணியின் வீரர்கள் ஒவ்வொரு ரையையும் சிறப்பாக செயற்படுத்தி அணியின் புள்ளிகளை அதிகரிதத்னர்.
11 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் நியுசிலாந்து வீரர் கலப் வூட்லி விதிமீறலில் ஈடுபட்டதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். கடைசி 5 நிமிடங்களில் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டனர். கடைசி தருணத்தில் தென்னாப்பிரிக்க அணி பெனால்ட்டி புள்ளிகளை பெற 48:45 என போட்டி விறுவிறுப்பின் உச்சத்திற்கு சென்றது.
யார் வெற்றிப்பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத அளவிற்கு இரு அணியினரின் சிறப்பான ட்ரைகள் போட்டியை காணவந்தவர்களுக்கு விருந்தாக அமைந்தது. மற்றுமொரு நியுசிலாந்து விரர் ரன்டல் பேகர்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்ட்டதுடன் அவரும் மைதானத்திலிருந்து வெளியேறினார். காரணம் அவரால் எதிரணியான தென்னாப்பிரிக்க அணிக்கு 7 புள்ளிகள் வழங்கப்பட்டது. கடைசி தருணத்தில் காட்சிகள் மாறும் என சொந்த மைதானத்தில் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இறுதியில் நியுசிலாந்து அணி சிறிய இடைவெளியில் 48:45 என தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது. கடந்த முறையும் சம்பியன் பட்டத்தை பெற்றிருந்த நிலையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் வெற்றிப்பெற்று அசத்தியது நியுசிலாந்து அணி.