தோல்விக்கு காரணம் இதுதான்: என்ன சொல்கிறார் தோனி?

ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மாத்திரமே பெற்றது.

18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடித்த குறைந்தபட்ச ரன் இதுவாகும். அத்துடன், சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்தபட்ச ரன்களை பதிவு செய்த 2-வது அணி என்ற மோசமான சாதனையையும் சென்னை படைத்தது. 

இதில் பெங்களூரு அணி 2019-ம் ஆண்டு சென்னைக்கு எதிராக 70 ரன்களில் ஆல் அவுட் ஆனதே முதலிடத்தில் உள்ளது. சென்னை தரப்பில் துபே 31 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 44 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. இதன்படி கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் ஐ,பி.எல். தொடரின் தனது 3 வெற்றியை பதிவு செய்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தொடர்ந்து 5 -வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. தோனி கேப்டன்ஷப்பில் சென்னை அணி கம்பேக் கொடுக்கும் என சேப்பாக்கத்தில் குவித்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, “கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. இன்னும் ஆழமாக என்னவெல்லாம் தவறாக செல்கிறது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். நிறைய சவால்கள் இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும்.

நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. பேட்டிங்கின் போது பந்து கொஞ்சம் நின்றுதான் வந்தது. ஆனால், நாங்கள் பவுலிங் செய்கையில் அவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. எங்களுக்கு பார்ட்னர்ஷிப்களே அமையவில்லை. பவர்பிளை பற்றி பேசுகையில், சூழலை பற்றியும் பேச வேண்டும். நாங்கள் சில போட்டிகளில் நன்றாக ஆடியிருக்கிறோம்.

சென்னை அணி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் காட்டமாக பதிவு
எங்களுடைய அணுகுமுறையை வேறு அணிகளோடு ஒப்பிட வேண்டாம் என நினைக்கிறேன். எங்களுடைய பலம் என்னவோ அதற்கேற்ப ஆடினால் போதும் என நினைக்கிறேன். எங்கள் அணியில் சிறப்பான ஓப்பனர்கள் இருக்கிறார்கள். 

அவர்கள் எல்லா பந்துளையும் சிக்சர் அடிக்கக்கூடியவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் திறன் வாய்ந்த தரமான பேட்டர்கள். ஸ்கோர் போர்டை பார்த்து அழுத்தம் ஏற்றிக்கொள்ளாமல் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தாலே நமக்கு தேவையான ஸ்கோர் வந்துவிடும்.

பவர் பிளேவில் 62 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்து ஆடக்கூடாது. ஏனென்றால் பவர் பிளேவில் விக்கெட்டுகளை அதிக அளவு இழந்துவிட்டால் பின்னர் நடு வரிசை வீரர்களுக்கு அது கடினமாக மாறிவிடும். இதன் மூலம் பின்வரிசை வீரர்களால் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாது” என்று அவர் கூறினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள

News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!

JOIN NOW


🎧 Listen Live on Aha FM – Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!