நீங்கள் ஜியோ யூஸரா… வாட்ஸ்அப், மைஜியோ ஆப் மூலம் உங்கள் கால் ஹிஸ்ட்ரியை சரிபார்க்கலாம்!

jio 2025 02 d1182d7785cafafba09de8008bcc6eb2

இந்த வழிமுறைகளில் உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். இதில், வாட்ஸ்அப், மைஜியோ ஆப்ஸ், ஜியோ வெப்சைட், இமெயில் மற்றும் கஸ்டமர் கேர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் ஜியோ கால் ஹிஸ்ட்ரியை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

வாட்ஸ்அப்பில் ஜியோகேர் சப்போர்ட் மூலம் ஜியோ கால் ஹிஸ்ட்ரியை எவ்வாறு சரிபார்ப்பது:

1. ஜியோகேர் சப்போர்ட் வாட்ஸ்அப் நம்பர் ஆன +91 7000770007 என்ற நம்பரை சேவ் செய்ய வேண்டும்.

2. இந்த நம்பரில் “மை அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்” என டைப் செய்து சென்ட் பண்ணவும்.

3. இதன் பிறகு அவர்கள் உங்கள் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் லிங்க்-கை உங்களுக்கு அனுப்புவார்கள்.

4. லிங்க்-கை கிளிக் செய்து, உங்களின் கால் ஹிஸ்ட்ரியை சரி பார்க்கவும்.

MyJio ஆப் மூலம் ஜியோ கால் ஹிஸ்ட்ரியை எவ்வாறு சரிபார்ப்பது:

1. உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது iOS டிவைஸில் MyJio ஆப்-ஐ ஓபன் செய்யவும்.

2. உங்கள் ஜியோ மொபைல் எண்ணைப் பயன்படுத்தி லாகின் செய்யவும்.

3. ஹோம் ஸ்கிரீனில் ‘மொபைல்’ ஆப்ஷனை செலக்ட் செய்து, ‘மை ஸ்டேட்மென்ட்’ என்பதை கிளிக் செய்யவும்.

4. நீங்கள் கால் ஹிஸ்ட்ரியை பார்க்க விரும்பும் நாட்களை (எ.கா., 7, 15 அல்லது 30 நாட்கள்) தேர்வு செய்யவும்.

5. ஆப்-இல் நேரடியாக ஸ்டேட்மென்ட்டை பார்க்கலாம், அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம் அல்லது ஈமெயில் மூலமும் பெறலாம்.

6. ‘யூசேஜ் சார்ஜஸ்’ என்பதற்குச் சென்று, ‘வாய்ஸ்’ என்பதைத் செலக்ட் செய்ய வேண்டும். பிறகு கால் ஹிஸ்ட்ரியை காட்ட, ‘கிளிக் ஹியர்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

ஜியோ இணையதளத்தில் இருந்து ஜியோ கால் ஹிஸ்ட்ரியை எவ்வாறு சரிபார்ப்பது:

1. உங்கள் பிரௌசரில் ஜியோ லாகின் பேஜ்க்கு செல்லவும்.

2. உங்கள் ஜியோ எண்ணை என்டர் செய்து OTP ஐ ஜெனரேட் செய்யவும்.

3. லாகின் செய்ததும், ‘ஸ்டேட்மென்ட்’ பகுதிக்கு செல்லவும்.

4. நீங்கள் கால் ஹிஸ்ட்ரியை பார்க்க விரும்பும் நாட்களை தேர்வு செய்யவும்.

5. ‘வியூ ஸ்டேட்மெண்ட்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

6. ‘யூசேஜ் சார்ஜஸ்’ என்பதற்குச் சென்று, ‘வாய்ஸ்’ என்பதைத் செலக்ட் செய்ய வேண்டும். பிறகு கால் ஹிஸ்ட்ரியை காட்ட, ‘கிளிக் ஹியர்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

ஈமெயில் வழியாக ஜியோ கால் ஹிஸ்ட்ரியை எவ்வாறு சரிபார்ப்பது:

1. உங்கள் பதிவு செய்யப்பட்ட ஈமெயில் அட்ரஸில் இருந்து [email protected] க்கு ஈமெயில் எழுத வேண்டும்.

2. ஈமெயிலில், நீங்கள் பார்க்க விரும்பும் நாட்களுக்கு கால் ஹிஸ்ட்ரியை ரெக்வஸ்ட் செய்யவும்.

3. உங்கள் பெயர், ஜியோ மொபைல் எண் மற்றும் கால் ஹிஸ்டரி தேதி ஆகியவற்றை சேர்க்கவும்.

4. பின்னர் ஈமெயிலை சென்ட் செய்து பதிலுக்காக காத்திருக்கவும்.

கஸ்டமர் கேர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலம் ஜியோ கால் ஹிஸ்ட்ரியை எவ்வாறு சரிபார்ப்பது:

1.ஜியோ கஸ்டமர் கேர் சேவையைத் தொடர்புகொள்ள, உங்கள் ஜியோ எண்ணிலிருந்து 199 என்ற நம்பரை டயல் செய்யவும்.

2. கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ் உடன் பேசுவதற்கு IVR வழிமுறைகளைப் பின்பற்றவும்.

3. அவருடன் கால் இணைக்கப்பட்டதும், நீங்கள் விரும்பிய நாட்களுக்கு உங்கள் கால் ஹிஸ்ட்ரியை ரெக்வஸ்ட் செய்யவும்.

4. அவர்கள் உங்களிடம் கேட்கும் தகவல்களுக்கு சரியான பதில் அளிக்க வேண்டும்.

5. ஈமெயில் அல்லது பிற வழிகளில் உங்கள் கால் ஹிஸ்ட்ரியை எவ்வாறு பெறுவது என்பது குறித்து எக்ஸிகியூட்டிவ் உங்களுக்கு வழிகாட்டுவார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!