நொக்கியா நிறுவனம் (N0KIA) நமக்கு சொன்ன படிப்பினை

நொக்கியா நிறுவனம் (N0KIA) நமக்கு சொன்ன படிப்பினை
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வரை மொபைல் போன் உலகில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் என்றால் அது பின்லாந்தின் நொக்கியா என்பதை அறியாதவர்கள் யாருமில்லை.
எனினும் கடந்த 2013 ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் nokia நிறுவனத்தை 7.17 பில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கியது. இது அந்நிறுவனத்தின் கடந்த கால மதிப்புடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த விலையாகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் nokia நிறுவனத்தை விலைக்கு வாங்கியதன் பின் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், நொக்கியா நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் தனது உரையை நிறைவு செய்யும் போது கூறிய விடயம் காலா காலத்துக்கும் மக்களை சிந்திக்க வைத்த ஒரு விடயமாகக் காணப்பட்டது.
அதாவது “நாங்கள் எந்தவித தவறையும் செய்யவில்லை, ஆனால் நாம் தோற்றுப் போய் விட்டோம்.” என்று கூறினார்.
இவ் வார்த்தைகளைக் கூறும் போது அவர் மாத்திரமின்றி அவருடன் கடமையாற்றிய நொக்கிய நிறுவனத்தின் மொத்த நிர்வாக குழுவும், பணியாளர்களும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டனர்.
நொக்கியா என்பது ஒரு சர்வதேசப் புகழ் பெற்ற மிகவும் பிரபலமான நிறுவனம். தொழில் உற்பத்தி ரீதியாக அவர்கள் எந்தவித தவறையும் செய்யவில்லை. ஆனால் உலகம் நாளுக்கு நாள் ஏன் நொடிக்கி நொடி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
எனினும் எதிர்கால தொழில்நுட்ப நிலமை எப்படி மாறும் என்ற முக்கியமான விடயத்தை நொக்கியா கணிக்கத் தவறி விட்டது, நொக்கியா எதிர்காலத்திற்கு ஏற்றவாறு திட்டங்களை வகுக்கத் தவறி விட்டது, எதிர்காலத்திற்கு முகங் கொடுப்பதற்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ளத் தவறி விட்டது.
அதனால் உலகின் மிகப் பிரமாண்டமான தொலைபேசி நிறுவனமாக மாறுவதற்கான வாய்ப்பை நொகியா நிறுவனம் இழந்தது, மிகப் பெரும் வருமானத்தை ஈட்டக்கூடிய நிறுவனம் என்ற வாய்ப்பை இழந்தது, தனது தொழிலில் துறையில் தொடந்தும் நிலைத்து நிற்கக் கூடிய வாய்ப்பை இழந்தது மலிவான விலகை்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
நொக்கியாவிற்கு ஏற்பட்ட கவலைக்கிடமான சம்பவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால்
நீங்கள் இன்றைய காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் தகுந்தாற் போல் உங்களையும், உங்கள் தொழில் மற்றும் அன்றாட விடயங்களையும் அப்டேட் செய்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் தானாக போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு விடுவீர்கள்.
நீங்கள் நாள் தோறும் புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றால், அதில் ஈடுபாடு காட்டவில்லை என்றால் உங்கள் சிந்தனைகளும் மனநிலையும் காலாவதியனதாகவே காணப்படும். கால சக்கரத்திற்கு தகுந்தவாறு உங்களால் விரைவாக ஓட முடியாவிட்டால் உங்கள் நேரம் முடிந்து விடும்.
.
ஒரு மனிதன் அன்றாடம் புதியவற்றை கற்றுக் கொண்டிருக்கும் வரை அவன் வெற்றிகரமாக இருக்கிறான். அனைத்தையும் நான் கற்றுக் கொண்டுவிட்டேன், எல்லாம் எனக்கு தெரியும் என்ற சிந்தனை வந்துவிட்டால் அவரின் தோல்வி ஆரம்பமாகி விட்டது.
எனவே 40 வயதைக் கடந்த ஆலிம்களும் இதனை சற்று கவனத்திற் கொள்வது மிகவும் வரவேற்கத்தக்கது.
Assalamu Alaikkum!
Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply