பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகள்
ஒரு மாத காலமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினர் நடாத்தி வரும் தாக்குதல்களால் காஸா பகுதியில் 10,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் மற்றும் 25,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன் காஸாவில் இறந்தவர்களில், 4100 க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் மற்றும் 2600 க்கும் மேற்பட்டோர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. போரின் காரணமாக இஸ்ரேலில் இறந்தவர்களின் சமீபத்திய தரவுகள் எதனையும் இஸ்ரேல் வௌியிட்டிருக்கவில்லை.
பலஸ்தீன் காஸாவில் போர் நிறுத்தத்தை நிராகரிக்கும் இஸ்ரேல், ஹமாஸ் முதலில் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களை விடுதலை செய்யும் வரை பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது என்று ஹமாஸ் அமைப்பு கூறுயுள்ளது.
பாலஸ்தீன் காஸா பகுதிக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு அல்லது ஹமாஸால் அங்குள்ள பணயக்கைதிகளை வெளியேற்றுவதற்கு தற்காளிகமான போர்நிறுத்தம் அமல்படுத்தப்படலாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஆனால் முழுவதுமான போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் நிறுத்தத்தின் மூலம் இஸ்ரேலின் போர் நடவடிக்கை வலுவிழக்கப்படலாம் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா முன்வைத்த பிரேரணையின் காரணமாகவும் சர்வதேச நாடுகளின் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கடும் எதிர்ப்பின் காரணமாகவும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு முழுமையான போர்நிறுத்தம் ஹமாஸ் அமைப்பினருக்கு மீண்டும் ஒருங்கிணைய வாய்ப்பாக அமையும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாகவும் காணப்படுகின்றது.
எனவே, பலஸ்தீன் காஸா பகுதியில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு உறுதியான நிலைப்பாடு ஏதுமில்லாத நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மனிதாபிமான போர்நிறுத்தத்தை உடனடியாக செயல்படுத்துமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்தது வருகின்றது.
இதே வேளை கடந்த 24 மணித்தியாத்திற்குள் ஹமாஸ் போராளிகளினால் இஸ்ரேலின் 27 கவசவாகன்களை அழித்துள்ளதாக ஹமாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதி நவீன கவச வாகனம் எனக் கூறப்படும் இஸ்ரேலின் மர்கவா கவசவானம் ஒன்றை தயாரிக்க சுமார் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்து கடும் ராக்கெட் தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றனர். இத் தாக்குதல் தொடர்பான வீடியோ கானொளிகளையும் அவ்வமபை்பினர் வௌியிட்டுள்ளனர்.
இஸ்ரேலிய மக்களும் தமது நாட்டிற்குள் விழும் தாக்குதல் காட்சிகளை வௌியிட்டு வருகின்றனர். இந்த ஆதாரங்கள் மூலம் நாள் தோறும் இஸ்ரேல் பலத்த தாக்குதல்களை சந்திப்பதுடன் அதிகளவான சேதங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர் என்பது நிரூபணமாகி வருகின்றது.
எனினும் இஸ்ரேல் தரப்பினர் மற்றும் அதன் சொல் பேச்சு கேட்கும் ஊடகங்கள் இந்த அவமானத்தை மறைத்து வருவதுடன். தீவிரவாத அமைப்பினர் கூறும் தகவல்கள் பொய்யானது என்றும் அவைகளை நம்ப வேண்டாம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை போர் முடிவடைந்த பின்னர் குறிப்பிடப்படாத காலத்திற்கு காசா பகுதியின் பாதுகாப்பு நிர்வாகத்தை இஸ்ரேல் வசம் எடுத்துக் கொள்ளப்படும் என இஸ்ரேல் பிரதமர் நேற்று தெரிவித்துள்ளார்.
▬ காஸா குழந்தைகளின் கல்லறையாக மாறி வருகிறது – ஐ.நா
பலஸ்தீன் காஸாவில் தற்போது காணப்படுவது மனிதாபிமான நெருக்கடிகளுக்கு அப்பால் சென்றுள்ள நிலைமையாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் ஏற்கனவே 4,100 குழந்தைகள் இறந்துள்ளதாகவும், காஸா குழந்தைகளின் சுடுகாடாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கின்றனர் அல்லது காயமடைகின்றனர் என்று அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று தசாப்தங்களில் வேறெந்தப் போர்க்களத்திலும் கொல்லப்பட்டதை விட கடந்த மாதத்தில் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மணி நேரமும் போர்நிறுத்தத்திற்கான தேவை வெளிப்பட்டு வருவதாகவும், காசா பகுதியில் மனிதாபிமானமற்ற துன்பங்களைத் தணிப்பது சர்வதேச சமூகத்தின் முதன்மையான மற்றும் அவசரப் பொறுப்பு என்றும் ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
பலஸ்தீன் காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், தேவாலயங்கள் மற்றும் ஐ.நா. தங்குமிடங்கள் மீது கூட இஸ்ரேல் குண்டுகளை வீசி வருகிறது என்று பொதுச் செயலாளர் குடெரெஸ் மேலும் கூறியுள்ளார்.
▬ காஸா மருத்துவமனைகள் ஹமாஸின் கட்டுப்பாட்டில் – இஸ்ரேல்
காஸா பகுதியில் செயல்படும் மருத்துவமனைகள் பல நாடுகளின் நிவாரண நண்கொடைகளின் மூலம் செயல்படுகின்றது, மேலும் வடக்கு காஸா பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை வளாகம் உலகின் மிகப்பெரிய முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவால் நிர்வகிக்கப்படுகின்றது.
ஆனால் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனைகளின் கீழ் சுரங்கப் பாதைகள் அமைத்து அதில் பதுங்கி இருப்பதாகவும், அங்கிருந்து இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் கூறியுள்ளது.
எனினும் இதனை மறுத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், தாம் மருத்துவமனை வளாகத்திற்கு அருகில் செயல்படுகின்றோமா என்பதை சோதனை செய்வதற்கு ஐ.நா. பிரதிநிதிகளை அங்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
பலஸ்தீன் காஸா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவம் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்துவதாகவும், தாக்குதல்களை நியாயப்படுத்த பொய்களை பரப்புவதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
▬ காஸாவில் உள்ள எமது மருத்துவமனை மனிதாபிமான அடிப்படையில் செயல்படுகிறது – இந்தோனேசிய
பலஸ்தீன் காஸாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையானது, அங்குள்ள பாலஸ்தீனியர்களின் மருத்துவத் தேவைகளுக்காக முழுமையான மனிதாபிமான அடிப்படையில் செயல்படுகிறது.
இந்தோனேசிய தன்னார்வத் தொண்டர்களின் உதவியுடன் பாலஸ்தீனிய ஆணையத்தால் இம் மருத்துவமனை செயல்படுவதாக இந்தோனேசிய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
குறித்த மருத்துவமனை தற்போது நோயாளிகளின் திறனைத் தாண்டி அதிகளவான மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பலஸ்தீன் காஸா பகுதிக்கான எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்தியதால், காஸா பகுதியில் இந்தோனேசிய மருத்துவமனையின் நடவடிக்கைகள் தற்போது தடைபட்டுள்ளதாக இந்தோனேசிய மருத்துவமனையின் தன்னார்வ குழு தெரிவித்துள்ளது.
▬ ஹமாஸுக்கான சர்வதேச நிதியுதவியைத் தடுப்பதற்கான மசோதா செனட்டின் ஒப்புதலுக்கு
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு, ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீனிய ஆயுத அமைப்புகளுக்கு நிதி வருவாயை தடுக்க அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கடந்த வாரம், பலஸ்தீன் ஹமாஸுக்கு சர்வதேச நிதியுதவி கிடைப்பதை தடுப்பதற்கான மசோதாவுக்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்திருந்தது, அது தற்போது செனட் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் பாலஸ்தீன அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க உத்தேசித்துள்ளது.
▬ சிரியா மற்றும் ஈராகில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல்கள் அதிகரிப்பு
ஒக்டோபர் 17ம் திகதிக்கு பின்னர் சிரியா ஈராக் உள்ள அமெரிக்க தளங்கள் 38 தடவை தாக்குதலிற்கு இலக்காகியுள்ளன என பென்டகன் தெரிவித்துள்ளது.
ரொக்கட்கள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ஈரான் சார்பு குழுக்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள பென்டகன் , தாக்குதல் காரணமாக 45 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் இதில் 24 படையினர் கடும் காயங்களிற்குள்ளாகியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
▬ இதுவரை 9 நாடுகள் இஸ்ரேலில் இருந்து தமது தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது
ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்து இதுவரை 9 நாடுகள் இஸ்ரேலில் இருந்து தமது தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் சாட் ஆகியவை இஸ்ரேலில் இருந்து தங்கள் தூதர்களை திரும்ப அழைக்கும் சமீபத்திய இரண்டு நாடுகளாக மாறியுள்ளன.
சாட், சிலி, கொலம்பியா, ஹோண்டுராஸ், பொலிவியா, பஹ்ரைன், தென்னாப்பிரிக்கா, ஜோர்டான், துருக்கி
இதில் முஸ்லிம் நாடல்லாத பொலிவியா இஸ்ரேலுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
45க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் நாடுகள் 3 மாத்திரமே இதுவரை இஸ்ரேலில் இருந்து தங்கள் தூதர்களையாவது திரும்ப அழைத்துக் கொண்டிருப்பது கவனிக்த்தக்கது.
Assalamu Alaikkum!