பாலஸ்தீன மக்களுடன் நாம் துணை நிற்போம் – சஜித்

சஜித்பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக இன்றும் நாளையும் தானும் ஐக்கிய மக்கள் கட்சியும் நேரடியாக துணை நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் நேற்று (26) முற்பகல் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கட்சியின் 18 ஆவது பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்களுக்காக தானும் ஐக்கிய மக்கள் கட்சியும் நேரடியாக நின்றதாகவும், பாலஸ்தீன மக்களை படுகொலை செய்ய இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இவ்விரு நாடுகளும் சகோதரத்துவத்துடனும் நட்புடனும் அமைதியாக வாழ வேண்டும் என்றார்.

தேசிய ஒற்றுமையே தனது பயணத்தின் முக்கிய நோக்கம் என்றும், சாதி, மதம் மற்றும் கட்சி ​வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும், நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும், இனங்களுக்கும் உள்ள உரிமை பாதுகாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

கொரோனா காலப்பகுதியில் இஸ்லாமிய மக்களை அடக்கம் செய்யும் உரிமைக்காக நின்றதாகவும், தானும் மற்றவர்களும் உலக சுகாதார அமைப்பின் முடிவுகளின் ஊடாக அடக்கம் செய்வதற்கு ஆதரவாக நின்ற போதிலும், அப்போதைய அரசாங்கம் இனவாத மதக் கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Facebook | WhatsApp | sarinigar

Leave a Reply