பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
( திருமணமானவர்கள்-ஆகாதவர்கள் அனைவருக்குமாக )

மிகவும் கஷ்டம் என்கிறீர்களா……!

ஆண்களைப் பொறுத்தவரையில் பெண்களது மனது என்பது புரிந்து கொள்ள முடியாத. ஒரு புரியாத புதிர்தான்! இதனால் தான் சிலர் பெண்களது மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். எனவே, ஓரளவுக்காவது அந்தப் புரியாத புதிரை புரிந்து கொள்வதற்காக தான் இந்த ஆராய்ச்சி.

சரி…! ஆராய்ச்சிக்கு வருவோம்;

பெண்கள் ஆண்களை விட அதிகம் பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள், எனினும் விவாதங்களில் அவர்களால் வெற்றி பெற முடிவதில்லை என்பது தற்போதைய ஆதாரப்பூர்வமான தகவலாகும்.

பெண்களின் மூலை ஆண்களின் மூலையை விட சிறியதாக இருந்தும் கூட பெண்ள் தான் பொதுவாக அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற தவலை அமெரிக்காவின் பள்டமோர் நகர பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆண் பெண் இருபாலாரின் சிறு மூலை பெரு மூலை என்ற இரு மூலைகளிலும் பேசும் போது ஈடுபடக்கூடிய பகுதிகளை அந்த ஆராய்சியாளர்கள் ஒத்துப் பார்த்ததில் அவ்விரு பகுதிகளிலும் பெண்களே அதிக அடர்த்தியான உயிரணுக்களைப் பெற்றிருந்தனர். பெண்கள் பேசும் திறனை ஏன் அதிகம் பெற்றிருக்கின்றனர் என்பதை விபரிப்பதற்கு இந்த ஆராய்சி உதவுகிறது என்று தாமஸ் க்ளாபர் கூறியுள்ளார்.

கல்வியாலும் சுற்றுப்புற சூழலில் அமைக்கிற காரணிகளாலும் தான் பெண்கள் ஆண்களை விட அதிகம் பேசும் திறனை பெற்றுள்ளனர் என்ற நம்பிக்கைக்கு அந்த ஆராய்சியின் முடிவுகள் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆனால் விவாதம் என்று வந்து விட்டால் பெண்களுக்கு இரண்டாம் இடம் தான். நூறு சதவீதம் சரியான பக்கம் நின்று கொண்டு பெண்கள் விவாதம் புரிந்தாலும் அவர்கள் பெரும்பாலும் தவறான பக்கத்தில் இருப்பதாகவே மற்றவர்களால் பார்க்கப்படுகின்றனர் என்பதை ஒரு ஆராய்சி உறுதி செய்கின்றது.

தங்களிடம் எதிர் வாதம் புரியும்படி ஆண்களை தூண்டிவிடுகின்ற போதெல்லாம் பெண்கள் தம் பக்கம் வாதம் புரிய தயாராகி விடுவார்கள், தான் உணர்சி வசப்பட்டு விட்டதாக பெண்கள் தமக்குத் தாமே ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு வாதத்தை நிறுத்திக் கொள்வார்கள்.

நியாயமான காரணத்தோடு நடப்பதாக தமக்குத் தாமே நினைத்துக் கொண்டிருக்கின்ற ஆண்கள், கோபம், அச்சம் இது போன்ற மற்ற உணர்வுகளுக்கும் எளிதில் ஆளாகக் கூடியவர்களாக பெண்களை நடத்துகின்றார்கள் என்று பிரித்தானிய மனநோய் மருத்துவர் டாக்டர் எலிசபெத் மெப்ஸ்டோன் கூறுகிறார்.

பெண்கள் ஆண்களுடன் செய்யும் விவாதங்களின் போது அறிவுப்பூர்வமற்ற உணர்வுபூர்வமான தங்களது கருத்துக்களை எடுத்துறைக்க முயற்சிக்கும் போது திணறிப் போய் விடுகின்றனர், அதனாலேயே அவர்களினது வாதம் எடுபடாமல் போய் விடுகின்றது.

எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற் போல் சாதகமாக மாற்றி விடும் திறமையும், பக்குவமும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. அத்துடன் ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அவர்களது குணங்களை ஓரளவு புரிந்து கொள்ளும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு.

அழகும், அறிவும், மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் குணங்களும், சிறந்த பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு முன்னேற்றம் என்பது கைக்கெட்டிய தூரம் தான்.

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 18 முதல் 33 வயதுக்குட்பட்ட பெண்களிடம், ”எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்” என்ற கேள்விக்கு 4 குணங்களை கொண்ட ஆண்களைப் பிடிக்கும் என்று அந்தப் பெண்கள் பதில் கூறினர்.

அவர்கள் கூறிய அந்த நான்கு குணங்கள், குழந்தைகள் மீதான விருப்பம், ஆண்மைக்குரிய விடயங்கள், உடலியல் ரீதியான கவர்ச்சி, அன்பான உள்ளம் ஆகியவையே அந்தப் பெண்கள் ‘டிக்’ செய்த குணங்களாகும்.

இயல்பாகவே குழந்தை என்றால் பெண்களுக்கு மிகவும் விருப்பமான விடயம். அதே குணம் ஆண்களுக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். மேலும் அதிக நேரம் ரொமான்ஸ் செய்யும் ஆண்களையும் பெண்களுக்கு பிடித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஆர்ப்பாட்டம் இல்லாத, அமைதியான ஆண்களையே பிடிக்குமாம்!

அடுத்து பெண்களுக்கு நிர்வாக திறன் என்பது இயல்பாகவே அமைந்துள்ளது. குடும்ப, அலுவலக நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்பது பொறுமை என்ற குணத்துடன் செயல்படும் பெண்களுக்கு  நிச்சயமாக இறைவனின் அருட் கொடை என்று தான் சொல்ல வேண்டும்.

நிதி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திலும் தற்கால பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். இன்று வாங்கப்படும் லோன், கிரெடிட் கார்டு, பில் கட்டண கொடுப்பனவுகள் மற்றும் பிற நிதி விடயங்களில் மிகச் சரியாக நடந்து கொள்கின்றனர்.

இன்றைய பெண்கள் நவீன தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர் என்கிறது ஒரு இங்கிலாந்து ஆய்வு. அதுமட்டுமின்றி சேமிப்பிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர் பெண்கள்.

பெண்களின் பார்வை என்பது மிகவும் கூர்மையானது என்பது கணவன்மார்களின் கூற்றாகும். பெண்கள் ஒரு வீட்டையோ அல்லது நபரையோ ஒரு முறை பார்த்தாலே போதும், அதை அவர்கள் துல்லியமாக கணித்துவிடுகின்றனர்.

அதே போல் தமது கணவன்மார்களின் தவறுகளை. மனதில் இருக்கும் விடயங்களை குறிப்புகளால் உணர்ந்து கொள்ளும் திறன் பெண்களிடம் உண்டு. அதனால்தான் திருமணமான ஆண்கள், தமது மனைவியிடம் மிகவும் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்கின்றனர்.

உடல் ஆரோக்கியம் சம்பந்தமான விடயங்களிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்பொழுதும் பெண்களுக்கே முன்னெச்சரிக்கை உணர்வு அதிகமாக காணப்படும். மேலும் எதையும் நிதானமாக யோசித்து செயல்படும் குணம் கொண்ட பெண்கள் எதிலும் அவசரப்பட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதும் குறைவு.

படிக்கும் முறையில் கூட ஆண்களை விட பெண்கள் வித்தியாசமாக உள்ளனர். ஆண்கள் பெரும்பாலும் பரீட்சைக்கு முன்னர் மட்டுமே நள்ளிரவு, அதிகாலை வரை, என்று படிக்கும் பழக்க வழக்கத்தை கொண்டுள்ளனர்.

ஆனால் பெரும்பாலான பெண்கள் அன்றாடம் வகுப்பில் நடாத்தப்பட்ட பாடங்களை, அன்று மாலையில் அல்லது இரவில் படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

சரி… எப்படிப்பட்ட ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்காது?

பெண்களுக்குப் பிடித்தமான விடயங்களில் மிகவும் முக்கியமானது சுத்தம், சுகாதாரம். எனினும் ஆண்கள் அப்படியில்லை. பல நாட்கள் கழுவாத ஜட்டி, கெட்ட வாடை வீசும் சொக்ஸ், பறட்டை தலை முடி மற்றும் உடை விடயங்களில் பெரிதாக அக்கறை கொள்வதில்லை என்பதே பெண்கள் ஆண்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டு. பொதுவாகவே இப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் வெறுக்கின்றனர்.

பொது இடங்களில் மற்றும் கூட்டங்களில் பேசும் பெண்களின் பேச்சு மிகவும் தெளிவாக இருப்பதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அனைத்து விடயங்களையும் திறந்த மனதுடன் பேசுகிறேன் என்று கூறிக் கொண்டு, தேவையற்ற நபரிடம், தேவையின்றி பேசும் பலவீனம் பெண்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புகைத்தல், மது, சூது பாவனை போன்ற கெட்ட விடயங்களிலும் பெண்களுக்கு ஈடுபாடு இல்லாததால் பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை.

பெண்களைப் புரிந்து கொள்ளாத எந்தவொரு ஆணின் வாழ்க்கையும் இனிக்காது என்பது யதார்த்தமான உண்மை.

By: Abu Safiyah

Assalamu Alaikkum!
Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply