சித்தாந்த ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக மோதிப் பார்ப்பவர்களிடம் நாமும் மோதிப் பார்க்க முடியும். ஏன் நேரடியாக நம்ம ஊரில் சொல்வதுபோல ‘வாடா ஒத்தைக்கு ஒத்தை மோதிப் பார்க்கலாம்’ என்பவனிடம் கூட நமக்கு உடல் வலிமையும் மன வலிமையும் இருந்தால் மோதிப் பார்க்கலாம். ஆனால் ‘மலத்தைக் கொண்டு அடித்துக் கொள்ளலாம் வா’ என்று ஒருவன் அழைத்தால், அவனை யாரும் தர்க்கவாதி என்றோ, சண்டைக்காரன் என்றோ அழைக்க மாட்டார்கள். மாறாக, மனநிலை பிறழ்ந்த பைத்தியக்காரன் என்று முடிவு செய்து ஓரமாக ஒதுங்கிப் போய் விடுவார்கள்.
ஆனால் அந்த பைத்தியக்காரன் நம்மீது மலத்தை எறிந்து விட்டால் நாம் சும்மா விட முடியுமா? ஓட ஓட விரட்டியடிக்க வேண்டாமா? அப்படி செய்யாமல் விட்டால் அந்த பைத்தியக்காரன் மீண்டும், மீண்டும் அதே வேலையைச் செய்ய ஆரம்பித்து விடுவான் இல்லையா?அப்படிப்பட்ட முத்திப்போன ஒரு பைத்தியக்காரன்தான் சீமான்.
நாயை அவிழ்த்து விட்டால் அது எப்படி நேராக குப்பைத் தொட்டியை நோக்கி ஓடுமோ, பன்றிகள் பட்டியைத் திறந்து விட்டால் எப்படி மலம் தின்ன ஓடுமோ, அதே போல சீமானிடம் மைக்கை நீட்டினால், முதலில் தன் ஆழ்மனதில் பெரியாரைப் பற்றி அவர் உருவாக்கி வைத்திருக்கும் அசிங்கம் பிடித்த அவதூறான கருத்தை வாந்தி எடுக்கத் தொடங்கி விடுவார்.
அவர் பேசியதற்கு ஆதாரம் கேட்டால், ஆதாரத்தை நீயே கொடு என்று நம்மிடமே திரும்பக் கேட்பார். அது எப்படி என்றால், நாம் சீமானைப் பார்த்து நீ ஒரு ஆண் விபச்சாரன் என்று சொல்லிவிட்டு, நான் சொல்வது பொய் என்றால் அதை நீயே நிரூபி என்று சொல்வதைப் போன்றது.
அப்படித்தான் சில தினங்களுக்கு முன் வழக்கம் போல வாயில் மலம் கழித்த சீமான், ‘உடல் இச்சை வந்தால் தாய், மகள், சகோதரியுடன் உறவு வைத்துக் கொள்ளலாம்’ என பெரியார் கூறியதாகப் பேசியிருந்தார்.
இதற்கு தமிழ்நாடு முழுக்க கடும் கண்டனம் எழுந்த நிலையில் தமிழகம் முழுக்க சீமான் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் 20ஆம் தேதிக்குள் காவல்துறை நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்திரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சீமானின் இந்த சில்லரைத்தனமான பேச்சுக்கு கடும் கண்டன்ங்களைப் பதிவு செய்திருக்கின்றன. சீமானைப் போலவே வாயில் மலம் கழிக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டுமே சீமானை ஆதரித்துள்ளார். ஆதரித்ததோடு பெரியார் அப்படிப் பேசியது உண்மைதான், அதற்கான ஆதாரத்தை தான் வெளியிடப் போவதாகவும் சென்னார்.
ஆனால் இதுவரை கேடுகெட்ட பொய்யன் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிடவேயில்லை. சீமானுக்கும் அண்ணாமலைக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் இருவருமே பொய்யை மட்டுமே பேசிப் பிழைக்கும் ஈனர்கள் என்பதுதான்.
பெரியார் சொன்னதாக சீமான் சொன்ன செய்தி, விடுதலை இதழில் 1953-ஆம் ஆண்டின் மே 11ஆம் தேதி வெளியாகியிருப்பதாக இதற்கு முன் இதே குற்றச்சாட்டை வைத்தவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
ஆனால் குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழின் எந்தப் பக்கங்களிலும் இதுபோன்ற ஒரு செய்தி எந்த இடத்திலும் இடம்பெறவில்லை.
அப்ப ஏன் திரும்ப திரும்ப அயோக்கியர்கள் இதை பரப்புரை செய்கின்றார்கள்? அவர்களுக்கு பெரியாரின் பெயரைக் கெடுக்க வேண்டும். அதன் மூலம் அவர் தமிழ்நாட்டில் உருவாக்கி வைத்திருக்கும் பார்ப்பன எதிர்ப்பு மரபை உடைத்து, தமிழ்நாட்டை பார்ப்பன பாசிசம் நிறைந்த சாதிவெறி, மதவெறி அரசியலுக்கு உட்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பி, தமிழ்நாட்டின் வளங்களை பார்ப்பன, பனியா கும்பல் கொள்ளையடிக்கத் திறந்துவிட வேண்டும்.
இப்போது கூட மதுரை அரிட்டாபட்டியில் அமையவிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள். தமிழகம் முழுக்க இந்த நாசகார திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. எனவே இதில் இருந்து கவனத்தை திசை திருப்பவே கைக்கூலி சீமான் வேலை பார்க்கின்றாரோ என்ற சந்தேகம் எழுகின்றது.
முன்புபெல்லாம் சீமான் பொய் பேசினால் கருத்தளவில் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். குறிப்பாக, ஈழப் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, விடுதலைப் புலிகளின் இராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்த நபர்கள் தனக்கு ஆமைக் கறி, உடும்புக் கறி, கறி இட்லி என விதவிதமாக சமைத்துப் போட்டு, தான் எதைச் சாப்பிட்டேன், எதைச் சாப்பிடவில்லை எனக் குறிப்பு எடுத்தார்கள் என்று கூச்சமே இல்லாமல் பரப்புரை செய்தபோது, தமிழ் மக்கள் அழித்தொழிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட அதைப் பற்றி இம்மி அளவும் கவலைப்படாமல் விடுதலைப் புலிகள் சுகபோகமாக உண்டு களித்ததாக ஒரு பிம்பத்தை உருவாக்கியதாக சீமான் மீது காறி உமிழ்ந்தார்கள்.
ஆனால் இன்று சீமான் பேசி இருப்பது அவ்வாறான ஒன்றல்ல. காரணம் பெரியாரின் எழுத்துகள் புத்தகங்களாக வெளியாகி பெரும்பான்மை மக்களால் குறிப்பாக இடதுசாரி சிந்தனை கொண்டவர்களால் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கின்றது.
ஒருவேளை சீமான் சொல்வது உண்மை என்றால், பெரியாரின் எதிரிகள் அதை பிரிண்ட் போட்டு ஊர் முழுவதும் விநியோகமே செய்திருப்பார்கள்.
தற்போது பெரியாரைப் பற்றி பேசியதற்கு ஆதாரம் கேட்டால் “எல்லா ஆதாரங்களையும் நீங்கள் முடக்கி வைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? இவ்வளவு பேர் எடுத்து காணொளிகளாகப் போடுகிறோம். பொய் என்றால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன். வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கி வைத்துக் கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?” என்று கூச்சமே இல்லாமல் பேசுகின்றார்.
அப்படி என்றால் இந்த பொய்யன் அதை எங்கு படித்தார்? அதையாவது சொல்ல வேண்டும் அல்லவா?
மானமுள்ள மனிதனாக இருந்தால் சொல்வார். ஆனால் உளுத்துப்போன ஆர்.எஸ்.எஸ் கைக்கூலியால் எப்படி இல்லாத ஆதாரத்தைக் கொடுக்க முடியும்?
தமிழகத்தில் எத்தனையோ தமிழ்த்தேசிய அமைப்புகள் உள்ளன. சீமானை விட பழம் தின்று கொட்டை போட்ட ஆட்கள் எல்லாம் இருக்கின்றர்கள். ஆனால் அவர்கள் கூட பெரியாரைப் பற்றி இவ்வளவு இழிவாகப் பேசியதில்லை.
என்னுடைய பணியே திராவிடத்தை எதிர்ப்பது, பெரியாரை எதிர்ப்பது என்றால் எதிர்த்துவிட்டுப் போகட்டும்; அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் விமர்சனம் நேர்மையானதாக, ஆதாரப்பூர்வமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அயோக்கியத்தனமாக, அபத்தமானதாக, சில்லரைத்தனமாக இருந்தால் இனியும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
மேலும் பெரியார் “துலுக்கர்களுக்குக் கொடுக்கும் இடஒதுக்கீடு சாணியில் கால் வைப்பதற்குப் பதிலாக மலத்தில் கால் வைப்பதற்குச் சமம்” எனக் கூறியதற்குச் சொல்கின்றார்
ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சியின் பழைய ஆவணத்தில் “தமிழ்நாட்டு ஆட்சியை திராவிடர்களிடம் இழந்தோம். தொடர்ந்து இன்றுவரை திராவிடர்களிடம் அடிமையாக இருந்து வருகிறோம் என்ற அறிவும் மானமும் அற்றவர்களாக இருக்கிறோம். மேலும் நம்முடைய முந்தைய ஆண்டைகளான முகமதியர்கள், விசயநகர நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் முதலியோருடைய அரசியல் சின்னங்கள் அகற்றப் படவில்லை. அவர்களுடைய பொருள் ஆளுமைகளும் (நிலவுடைமை, தொழிலுடைமை) நீக்கப் படவில்லை, கட்டுபடுத்தப் படவில்லை என்ற புரிதல் அற்றவர்களாக இருக்கிறோம்” என்று விஷத்தைக் கக்கி இருந்தார். சீமானின் எதிரிகள் பட்டியலில் முதலில் இருந்தவர்கள் முகமதியர்கள் தான்.
இன்றும் உருது பேசும் முஸ்லிம்களை தமிழர்களாக அதிபர் சீமான் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ‘பெரியார் இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து’ என்ற ஒரு நூலையே எழுதியிருக்கின்றார். இன்றும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவத்தைத் தாண்டி அவரைக் கொண்டாடுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களுக்கு பரம எதிரியாக இருக்கும் பார்ப்பன சக்திகளை பெரியார் அம்பலப்படுத்தியதுதான்.
“2008-ல் என் தலைவர் பிரபாகரனை சந்திக்கும் வரை நானும் இந்தக் கூட்டத்தில் தான் இருந்தேன். அவரைச் சந்தித்த பிறகு தான் தமிழ்த் தேசிய அரசியலைத் தெரிந்து கட்டமைக்கிறேன்” என்கின்றார்.
இப்படி சொன்ன அதே ஊத்தவாயால்தான் ஈழப்படுகொலைக்குப் பின்னர் ஐநாவின் டப்ளின் தீர்ப்பாயத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சமர்பித்த 41 பக்க அறிக்கையில் LTTEயினர் போர்க் குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார் சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில், “ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTEயினர் பெற்றோரிடம் இருந்து பிடுங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTEயினர் செய்தனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTEயினர் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தினர், தப்பிக்கப் பார்த்த தமிழர்களை சுட்டுக் கொன்றனர்” என்றும் சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தார்.
ஒரு கேடுகெட்ட மாமா பயல் கூட சீமான் மாதிரி மாற்றி மாற்றி பேசமாட்டான். அதுமட்டுமல்ல சொத்துக்கு வாரிசு தேடி 72 வயதில் 26 வயதுப் பெண்ணை பெரியார் திருமணம் செய்து கொண்டார் என்கின்றார்.
ஆனால் உண்மையோ, அப்போது பெரியாருக்கு வயது 70. மணியம்மையாரின் வயது 31. பெரியார் என்ன காரணத்திற்காக மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டார், அப்போது இருந்த வாரிசுரிமை சட்டம் என்ன என்பதைப் பற்றி எல்லாம் டன் கணக்கில் பெரியார் இயக்கத் தோழர்களே எழுதி விட்டார்கள்.
இது எல்லாம் புளுகன் சீமானுக்குத் தெரியாதது அல்ல!.
ஆனால் சீமானுக்கும், அவரது மனைவிக்குமான வயது வித்தியாசத்தைப் பற்றி திராணியிருந்தால் சீமான் பொதுவெளியில் பேசத் தயாரா? சீமானுக்கு தற்போது 58 வயது ஆகின்றது. அவரது மனைவி கயல்விழிக்கு 31 வயது என்று சொல்கின்றார்கள். அப்படிப் பார்த்தால் சீமானைவிட 27 வயது குறைந்தவர் கயல்விழி. அது மட்டுமட்டுமல்ல சீமானுக்கு அவரது மாமியாரைவிட வயது அதிகமாம்.
பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொள்ள பொதுத்தொண்டு என்ற காரணம் இருந்தது. ஆனால் கயல்விழியை சீமான் திருமணம் செய்துகொள்ள அவரது சொத்து மட்டுமே காரணமாக இருந்தது.
பெரியாரை கன்னடர் என்று இழிவுபடுத்தும் இதே அயோக்கியன், தெலுங்கு விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த கயல்விழியை திருமணம் செய்து கொண்டார்.
நாம் எதை வேண்டுமானாலும் பேசலாம், அதை உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்க்காமல் தன்னுடைய மூளை மழுங்கி தம்பிகள் அப்படியே நம்பி விடுவதோடு, அதற்கு முட்டும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கைதான் சீமானை இப்படி எல்லாம் பேச வைக்கின்றது.
சீமான் ஆர்.எஸ்.எஸ்சின் அடியாளாக முழு அம்மணமாக அம்பலப்பட்டு நிற்கின்றார்.
பெரியாரை நேர்மையான வழியில் எதிர்கொள்ளத் திராணியற்ற இந்தக் கோழை தற்போது அவதூறுகளையும் அபத்தங்களையும் கையில் எடுத்துள்ளது. 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செயப்பட்டிருக்கின்றன. திமுக கூட வழக்கு தொடுத்துள்ளது. ஆனால் இதுவரை சீமான் கைது செய்யப்படவில்லை.
சீமான் மீது எடுக்கப்படும் நடவடிக்கை பெரியாரை ஆதாரமற்று அவதூறாகப் பேசியும் இழிவு செய்தும் வாழும் அயோக்கியர்களுக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
– செ.கார்கி