மின் கட்டணத்தை குறைக்க ஒப்புதல்

மின் கட்டணத்தை குறைக்க ஒப்புதல்

“குறைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (16) முதல் அமலுக்கு வருகிறது.

வீட்டு பாவனை கட்டணம் 27% குறைப்பு, மத வழிபாட்டுத் தளங்களுக்கு 30% கட்டணம் குறைப்பு, ஹோட்டல்கள் மற்றும் தொழில் துறைகளுக்கு 25% குறைப்பு, மேலும் பொது பயன்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் மின் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தக் குறைப்பு 22.5%

இந்த ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் 22.5% என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வீட்டு மின் அலகு ஒன்றின் விலை 8 ரூபாயில் இருந்து 6 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 30-60 வீட்டு மின் அலகுகளின் பெறுமதி 20 ரூபாவில் இருந்து 9 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 30 யூனிட் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் மாதாந்திர மின் கட்டணம் ரூ.390ல் இருந்து ரூ.280 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

60 யூனிட் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் மாதாந்த மின் கட்டணம் 1,140 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மத வழிபாட்டுத் தலங்களிலும் மின் கட்டணம் குறைக்கப்படுகிறது. 90 யூனிட் வரை, ஒரு யூனிட்டின் விலை 6 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை குறைக்க ஒப்புதல் - சரிநிகர்

 

Leave a Reply