2
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொண்டார்.
அதன் போது பணிப்பாளர், வைத்தியசாலையின் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், புதிய கட்டிட தொகுதி ஒன்றை அமைக்கப்பட வேண்டும், வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது என எடுத்துக்கூறினார்.
வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், நோயாளர்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சிகிச்சை வழங்குவதற்கும், தேவையான மனிதவள ஆதாரங்களை முழுமையாக வழங்குவது அவசியமாகும். எனவே உரிய அதிகாரிகள் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என பணிப்பாளர் த சத்தியமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்