ரணில் தான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

ரணில் தான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்ரணில் தான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – ரணிலின் இனவாத முயற்சிகளுக்கு எதிராக ஊடகவியலாளர்களின் குரல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவினது மக்கள் ஆதரவை தாங்கிக்கொள்ள முடியாத ரணில் விக்ரமசிங்கவின் இனவாதத்தை தூண்டும் முயற்சி ஊடகவியலாளர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறிப்பாக உயிர் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ள ஊடகவியலாளர்கள் முன்னிலை வகித்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதை சுனில் காமினி ஜயலத்தின் குறிப்பு விளக்குகின்றது. அந்தக் குறிப்பின் SARINIGAR தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியது அநுர அல்ல ரணில்

தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார்.

ஊடகங்களில் வெளியாகிய செய்திகளின் படி அனுர யாழ்ப்பாணம் சென்று கூறியதாக ரணில் விளக்கமளித்துள்ள விபரம் இதோ…

“அனுரா வந்தபோது என்ன சொன்னார்? தெற்கில் ஒரு மாற்றத்திற்காக மக்கள் அணிதிரளும் போது, அந்த மாற்றத்தை எதிர்ப்பவர்களாக நீங்கள் இருந்தால், தெற்கு மக்களிடம் என்ன மனநிலை உருவாகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அந்த மாற்றத்தை எதிர்ப்பவர்களாக, அந்த மாற்றத்தை எதிரானவர்களாக யாழ்ப்பாணத்தை சுட்டிக்காட்டுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? வடக்கு என்று சுட்டிக்காட்டப்படுவதை விரும்புகிறீர்களா? நான் மீண்டும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நாங்கள் வெற்றி பெறுவோம். ஆனால் நீங்கள் அந்த வெற்றியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். எப்போதும் அதற்கு எதிரானவர்களாக இருக்காதீர்கள்.”

இது எந்த வகையிலும் அநுரவினால் தமிழ் மக்களுக்கு விடுத்த அச்சுறுத்தல் அல்ல. ஆனால் மேற்கூறியவற்றுடன் அனுர கூறியதாக மேலதிகமாக ரணில் மற்றொரு பகுதியையும் சேர்த்துள்ளார்.

அதாவது.
“நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் அதை நான் பார்த்துக் கொள்வேன் என்று அநுர கூறியுள்ளார். இதனை நான் கண்டிக்கிறேன்” என ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இங்கு கூறியிருப்பது அப்பட்டமான பொய்யாகும். இது மிகவும் பாரதூரமான அறிக்கையாக காணப்படுகின்றது. ஜனாதிபதி என்ற வகையிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் என்ற வகையிலும் ரணில் விடுத்துள்ள இந்த அறிக்கை தொடர்பில் தேசிய மக்கள் கட்சி மேலதிக நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றோம்.

அநுர யாழ்ப்பாணம் சென்று போது தமிழ் மக்களிடம் கூறிய விடயம் முற்றிலும் சரியானது. அண்மைய வரலாற்றில் நடைபெற்ற மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில், அதாவது 2010, 2015 மற்றும் 2019 ஆகிய மூன்று தேர்தல்களிலும், வடக்கில் வாக்களித்த பெரும்பான்மையான தமிழ் மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் அல்லது ஐ.தே.க.யின் ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளருக்கு தங்கள் வாக்கை அளித்துள்ளனர்.

ஆனால் அந்தத் மூன்று தேர்தல்களிலும் ஒரு தேர்தலைத் தவிர மற்றைய இரண்டு தேர்தல்கலிலும் பெரும்பான்மையான தமிழர்கள் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெறவில்லை. 2015 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மட்டுமே தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்.

2019 இல், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் 69% வாக்குகளைப் பெற்றது முக்கியமாக வடக்கிற்கு வெளியே பெற்றுக் கொண்ட வாக்குகளினாலாகும்.

2019 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் தேர்தல் களத்தில் புரட்சிகர மாற்றத்தை வலுவாக எதிர்பார்க்கும் ஒரு ஆண்டாக காணப்படுகின்றது. அது அப்படியில்லை என யாராலும் எந்த வாதத்தையும் முன்வைப்பதற்கு எவ்வித வாய்ப்பும் கிடையாது.

இலங்கை மண்ணின் இந்த புறநிலை நிலைமை காரணமாக, தேசிய மக்கள் சக்தியின் வெற்றி ஏற்கனவே மிகவும் தெளிவாக உள்ளது. நாட்டின் தென்பகுதி இந்த வெற்றிக்கு தனது பங்களிப்பை நிரூபித்துள்ளது.

யாழ்ப்பாணம் சென்ற அனுர இதனையே கூறினார். இந்த தெளிவான வெற்றியில் தமிழ் மக்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கடந்த காலங்களைப் போலன்றி வடக்கும் தெற்கும் இணைந்து பெற்றுக் கொள்ளும் இந்த வெற்றி மிகவும் பிரமிக்கத்தக்கது. இது நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒரு சிறந்த வழியாகும்.

அந்த வகையில், வரலாறு நெடுகிலும் வடக்கின் மேட்டுக்குடியினரால் தென்னிலங்கையின் மேட்டுக்குடியினருக்கு ஏலம் விடப்பட்ட பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குரிமையை விடுவிப்பதற்கான ஒரு கோரிக்கையாக அனுரவின் அறிக்கை இருந்தது.

ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும், வடக்கில் உள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஐ.தே.க.வுக்கே வாக்களித்துள்ளனர். ஆனால் வரலாறு நெடுகிழும் ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்று வேறு எந்தக் கட்சியும் வடக்கில் அழிவை ஏற்படுத்தியதில்லை.

1983 கறுப்பு ஜூலை எனும் தமிழ் இனப் படுகொலையானது ஐ.தே.க.வின் உருவாக்கமாகும். ரணிலின் மாமாவாகிய ஜே. ஆர். ஜெயவர்தனவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த களனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ரணிலின் அரசியல் வழிகாட்டியுமான களுதேவகே சிறில் மேத்யூ இந்த கொடூரமான தமிழ் இனப்படுகொலையின் முன்னோடியாக இருந்தார்.

கொழும்பில் தொடங்கி நாடு முழுவதும் காணப்பட்ட தமிழர்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்து அழித்தது சிறில் மேத்யூவினது ஐ.தே.க.வின் குண்டர்கள் ஆவர், அவர்கள் ஏராளமான தமிழர்களை சித்திரவதை செய்து கொன்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க அரசாங்கம், தமிழர்-விரோத இனப்படுகொலையை தூண்டிவிட்டதோடு முழு நாட்டையும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் மூழ்கடித்தது.

கடைசி தமிழனின் தோலில் இருந்து செருப்பு தயாரிக்கப்படும் வரை தூங்க மாட்டேன் என்று ஐ.தே.க அரசாங்கத்தின் சிறில் மேத்யூ பகிரங்கமாக அறிவித்த போது ஐ.தே.க அரசாங்கத்தின் தலைவராக ரணிலு இருந்தார். தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டியது ரணில் விக்ரமசிங்கவே தவிர அநுர அல்ல.

1981 ல் நடைபெற்ற அபிவிருத்தி சபை தேர்தலின் போது, கொழும்பில் இருந்து ஐ.தே.க குண்டர்களை ரயில் மூலம் வடக்கிற்கு அழைத்துச் சென்று, தேர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாண நூலகத்தை முழுமையாக எரித்து நாசமாக்கியது, சிறில் மேத்யூவுடன் இணைந்திருந்த ரணில் அணியினரே தவிர அனுர குமார அல்ல.

தென்கிழக்கு ஆசியாவின் காணப்பட்ட மிகப்பெரிய நூலகமாகக் கருதப்படும் யாழ்ப்பாண நகர நூலகம், தமிழ் மக்களின் ஆன்மீகத்தின் அடையாளமாக இருந்தது. தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியது அதற்கு தீ வைத்து நாசமாக்கிய ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியியே தவிர, அனுர திஸானாயகவோ அல்லது தேசிய மக்கள் கட்சியோ அல்ல.

ரணில் மற்றும் அவரது ஜே.ஆர் மாமாவுடன் இணைந்து, இந்த நாட்டின் வடக்கு தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய அழிவுகள் அற்பமானவை அல்ல. 30 வருட உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்பப் புள்ளியை உருவாக்கியது வேறு யாருமல்ல, ரணில் உட்பட்ட ஐ.தே.க ஆகும்.

அந்த யுத்தத்தினால் இழக்கப்பட்ட உயிர்கள் மற்றும் சொத்துக்களின் பெறுமதி இவ்வளவு என சொல்லி முடியாதளவு உள்ளது. இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு மக்கள் மாத்திரம் அல்ல. அந்த கொடூர யுத்தத்தினால் தென்னிலங்கை இளைஞர் யுவதிகளும் அப்பாவி மக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாம் கண்டோம். அதன்படி ரணில் வடக்கில் உள்ள தமிழ் மக்களிடம் மாத்திரமல்ல தென்னிலங்கை சிங்கள மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் கொடூர வரலாற்றை தென்னிலங்கையின் பெரும்பான்மை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அதனால்தான் பல வருடங்களாக ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிற்கும் மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்துள்ளனர். இனி ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தென்னிலங்கை மக்களை ஏமாற்றிஅதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பது மிகவும் தெளிவாக உள்ளது.

வடக்கின் மேட்டுக்குடி வர்க்கம் தமிழர்களின் பாதுகாவலர் ரனில் தான் என ஏமாற்றி சித்தரிப்பதால் வடக்கில் உள்ள தமிழ் மக்களால் ரணில் போண்றவர்களை புரிந்து கொள்ள முடியாதுள்ளது.

ஆனால், 30 வருட கால யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரனிலுவும் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என்பதை பலர் உணர்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வடக்கு மக்களுக்கு இது தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவராக இருந்த சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 2018 யூலை 02 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் ஆற்றிய உரையை மீண்டும் கேட்டுப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வடக்கில் உள்ள தமிழ் மக்களின் அழிவிற்கு காரணமாகிய ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியிக்கு சார்பான யாரையாவது ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களியுங்கள் என தமிழ் மக்களிடம் கூறும் யாரேனும் ஒரு தமிழர் இருப்பார்களேயானால் அவரது உள்நோக்கம், தேவை என்ன என்பதை புரிந்துகொள்வது இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது.

சுனில் காமினி ஜயலத்கே
தமிழாக்கம் – SARINIGAR.com

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply