ரணில் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் – உச்ச நீதிமன்றம்

மக்களின் அடிப்படை உரிமைகளை ரணில் மீறியுள்ளார் - உச்ச நீதிமன்றம்தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் (2023) 09 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமையின் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என உயர் நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது.

அதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமையினால் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் கட்சி, தேசிய மக்கள் கட்சி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பஃப்ரல் ஆகிய கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்கிய போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!