அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கொஸ்கம, அளுத்தம்பலம ரயில் கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி இன்று (12) காலை விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதும் நேரத்தில் சாரதியும் பெண் ஒருவரும் முச்சக்கர வண்டியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
The post ரயில் – முச்சக்கரவண்டி விபத்து! appeared first on ITN News.